close
Choose your channels

கே.ஜி.எப்-2 படத்தில் நடித்துள்ள முக்கிய தமிழ் நடிகர் பற்றி தெரியுமா? வைரல் தகவல்!

Tuesday, March 29, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் கே.ஜி.எப்-2 திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பை பெற்றுவருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் டிரெய்லர் காட்சிகளில் ஒரு தமிழ் நடிகரின் முகம் இடம்பெற்றதால் ரசிகர்கள் கடும் ஆச்சயர்த்தை வெளியிட்டு வருகின்றனர்.

தமிழில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வெற்றிநடைபோட்ட திரைப்படம் “சார்பாட்டா பரம்பரை“. இந்தத் திரைப்படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் குத்துச்சண்டை வீரராக நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர்தான் நடிகர் ஜான் கொக்கேன். மலையாள சினிமாவில் பிரபலமான இவர் ஏற்கனவே அஜித் நடிப்பில் உருவான “வீரம்“ திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

இந்நிலையில் ஜான் கொக்கேன் தற்போது வெளியாகவுள்ள கே.ஜி.எப்-2 திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளார். மேலும் இந்தத் திரைப்படத்தின் டிரெய்லர் காட்சிகளில் எடுத்தவுடனேயே ஆக்ரோஷமாக ஜான் கொக்கேன் கத்திக் கொண்டிருப்பது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. கே.ஜி.எப் படத்தின் முதல் பாகத்திலும் இவர் நடித்திருந்தாலும் அந்த அளவிற்கு ரசிகர்களிடையே கவனிக்கப்படாத நிலையில் தற்போது இரண்டாம் பாகத்தின் டிரெய்லர் காட்சிகளில் எடுத்தவுடனே ஆக்ரோஷமாக ஜான் கொக்கேன் நிற்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் அவருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

மலையாள சினிமாவில் அதிகப் படங்களில் நடித்துள்ள ஜான் கொக்கேன், வேம்புலியாக “சர்பார்ட்டா பரம்பரை“ திரைப்படத்தில் ரசிகர்களிடையே கொண்டாடப்பட்டார். அதேபோல கே.ஜி.எப்-2 படத்திலும் இவரது கதாபாத்திரம் பேசப்படும் அளவிற்கு இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.