close
Choose your channels

'சார்பட்டா பரம்பரை'  படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய கமல்ஹாசன்!

Friday, August 6, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா, பசுபதி, கலையரசன், நடிப்பில் உருவான ’சார்பட்டா பரம்பரை’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை பாராட்டாத திரையுலகினர்களே இல்லை என்று கூறலாம். அதுமட்டுமின்றி அரசியல் தலைவர்களும் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் இன்று ’சார்பட்டா பரம்பரை’ படக்குழுவினர்களை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். பா ரஞ்சித், ஆர்யா, பசுபதி, ஜான் விஜய், ஜான் விஜய் உள்பட படக்குழுவினர் அனைவரும் கமல்ஹாசனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். படக்குழுவினர் அனைவக்கும் கமலஹாசன் தனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டார். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

திறமையான கலைஞர்கள் யாராக இருந்தாலும் நேரில் அழைத்து பாராட்டும் வழக்கத்தைக் கொண்ட கமலஹாசன், சார்பட்டா பரம்பரை' படத்தின் ஒட்டுமொத்த குழுவினரையும் வரவழைத்து பாராட்டி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.