close
Choose your channels

'சர்வம் தாளமயம்' ரிலீஸ் தேதியில் மாற்றம்

Sunday, December 23, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜிவி பிரகாஷ் நடிப்பில் ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான 'சர்வம் தாளமயம்' திரைப்படம் வரும் 28ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே நல்ல ஹிட்டாகியுள்ளதால் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு கிடைத்தது. அதேபோல் புரமோஷன் பணிகளும் நன்றாக நடந்ததால் இந்த படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். டிசம்பர் 20,21ஆம் தேதிகளில் ஐந்து தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளதால் 28ஆம் தேதி ரிலீஸ் செய்ய திரையரங்குகள் போதிய அளவில் கிடைக்காததே ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டதற்கு காரணமாக கூறப்படுகிறது.

ஜிவி பிரகாஷ், மஹிமா நம்பியார், காளிவெங்கட், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை காமன்மேன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.