close
Choose your channels

ராஜீவ் மேனனின் 'சர்வம் தாளமயம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

Wednesday, November 21, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவான 'சர்வம் தாளமயம்' திரைப்படம் ரிலீசுக்கு முன்னரே ஒருசில சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பாராட்டுக்களை பெற்று வருகிறது.

மேலும் கோலிவுட்டின் முன்னணி இயக்குனர்கள் சிலர் இந்த படத்தை பார்த்து பாராட்டி வருவதால் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த படம் வரும் டிசம்பர் 28ஆம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இயக்குனர் ராஜீவ்மேனன் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

முன்னதாக டிசம்பர் 20, 21ஆம் தேதிகளில் தனுஷின் 'மாரி 2', விஜய்சேதுபதியின் 'சீதக்காதி', 'சிவகார்த்திகேயனின் 'கனா' மற்றும் ஜெயம்ரவியின் 'அடங்கமறு' ஆகிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.