close
Choose your channels

சர்வதேசப்பட விழாவுக்கு தேர்வான ஜிவி பிரகாஷ் திரைப்படம்

Sunday, June 16, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் ராஜீவ் மேனன் இயக்கத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ஜிவி பிரகாஷ், நெடுமுடிவேணு, அபர்ணா பாலமுரளி மற்றும் பலர் நடித்த படம் ‘சர்வம் தாளமயம்’. இந்த படம் ஊடகங்களின் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று ஹிட்டான நிலையில் தற்போது இந்த படம் 2019ம் ஆண்டுக்கான 22வது ஷாங்காய் சர்வதேச திரைப்படவிழாவிற்கு ‘சர்வதேச பனோரமா’ பிரிவில் அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். 22வது ஷாங்காய் சர்வதேச திரைப்படவிழா ஜூன் 15 முதல் ஜூன் 24ஆம் தேதி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதே திரைப்பட விழாவில் கீர்த்தி சுரேஷ், சமந்தா, விஜய் தேவரகொண்டா, தல்கார் சல்மான் உள்பட பலர் நடித்த 'நடிகையர் திலகம்' திரைப்படமும் திரையிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.