கூவத்தூரில் சசிகலா சிறைவைப்பா? பொதுமக்கள் கொந்தளிப்பு

  • IndiaGlitz, [Saturday,February 11 2017]

சென்னை ஈசிஆர் அருகே உள்ள கூவத்தூர் சொகுசு ரிசார்ட் ஒன்றில் கடந்த நான்கு நாட்களாக அதிமுக எம்.எல்.ஏக்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். ரிசார்ட்டை சுற்றிலும் சசிகலாவின் ஆட்கள் பாதுகாப்பில் ஈடுபட்டிருப்பதாகவும், அவர்களது அட்டூழியதால் அப்பகுதி கிராமத்து மக்கள் பெரும் பாதிப்பு அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

பொதுமக்கள், பள்ளி மாணவ மாணவியர் செல்லும் பாதையை அடைத்து வைத்துக்கொண்டு அந்த பகுதி மக்களுக்கு தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இன்று சசிகலா கூவத்தூர் சென்றுள்ளதால் அங்கு குவிக்கப்பட்டிருக்கும் போலீசாரும் பொதுமக்களை அந்த பகுதிக்குள் செல்ல அனுமதிக்காததால் அந்த பகுதி கிராமத்து மக்கள் கொந்தளித்துள்ளனர்.

சசிகலாவும், அதிமுக எம்.எல்.ஏக்களும் உடனடியாக அந்த பகுதியில் இருந்து வெளீயேற வேண்டும் என்றும் இல்லையென்றால் எம்.எல்.ஏக்களை சந்திக்க ரிசார்ட் உள்ளே சென்றுள்ள சசிகலாவையும், அங்கிருக்கும் எம்.எல்.ஏக்களையும் முற்றுகையிட்டு சிறை பிடிப்போம் என்றும் அந்த பகுதி மக்கள் கொந்தளித்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளது.

More News

ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா உண்ணாவிரதமா? சென்னையில் பரபரப்பு

தமிழகத்தை ஆட்சி செய்வது யார் என்ற முடிவை எடுக்கும் அதிகாரம் கொண்ட ஆளுனர் வித்யாசாகர் ராவ், சென்னை வந்து இரண்டு நாட்கள் ஆகியும் எந்த முடிவையும் தெரிவிக்காமல் உள்ளார். நேற்று அரசு உயரதிகாரிகளுடன் ஆலோசனை செய்த அவர் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியதாக கூறப்பட்டு பின்னர் அது மறுக்கப்பட்டது...

சென்னையில் சுப்பிரமணியன் சுவாமி. ஆளுனரை சந்திக்கின்றாரா?

தமிழகத்தில் அரசியல் குழப்பங்கள் உச்சக்கட்டத்தில் உள்ள நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சென்னை வந்துள்ளார்...

ஆளுனர் மாளிகையை சுற்றி திடீர் போலீஸ் குவிப்பு

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் தங்கியிருக்கும் அதிமுக எம்.எல்.ஏக்களுடன் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அவருடன் செங்கோட்டையன், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரும் எம்.எல்.ஏக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்...

அதிமுகவை உடைக்க சதி நடக்கிறது. விஜயசாந்தி பேட்டி

பிரபல நடிகையும் தெலுங்கு மாநிலத்தின் அரசியல்வாதியுமான நடிகை விஜயசாந்தி தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் அசாதாரண சூழ்நிலை குறித்து ஐதராபத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

ஓபிஎஸ் அணியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார்?

தமிழக அரசியல் சதுரங்க விளையாட்டு உச்சகட்டத்தில் உள்ள நிலையில் முதல்வர் ஓபிஎஸ் அவர்களின் கை ஓங்கி வருகிறது என்பது ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் இருந்து வரும் செய்திகளின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.