சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு தேதி?

  • IndiaGlitz, [Monday,February 13 2017]

தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் குழப்பத்திற்கு தமிழக பொறுப்பு ஆளுனர் வித்யாசாகர் ராவ் எப்போது தீர்வு சொல்வார் என்று உறுதியாக தெரியவில்லை. ஆனால் இந்த குழப்பத்திற்கு விடை நாளை சுப்ரீம் கோர்ட் மூலம் கிடைத்துவிடும் என தெரிகிறது.

ஜெயலலிதா, சசிகலா, இளவரசன், சுதாகரன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டதால் சசிகலா, இளவரசன், சுதாகரன் ஆகியோர்களின் தலைவிதி நாளை நிர்ணயிக்கப்படலாம். குறிப்பாக சசிகலாவுக்கு முதல்வர் வாய்ப்பு கிட்டுமா? கிட்டாதா? என்பது நாளை தெரிந்துவிடும்

உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திர கோஷ் மற்றும் அமிதவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பை வழங்க உள்ள நிலையில் இந்த தீர்ப்பால் எந்தவித அசம்பாவிதமும் நடந்துவிட கூடாது என்பதற்காக தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

More News

கூவத்தூரில் தங்குகிறார் சசிகலா. எம்.எல்.ஏக்கள் சென்னை வருவது எப்போது?

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, அதிமுக எம்.எல்.ஏக்களை கடந்த ஒரு வாரமாக ஈசிஆர் சாலையில் உள்ள தனியார் சொகுசு ரிசார்ட் ஒன்றில் தங்க வைத்துள்ளார். நேற்று மற்றும் நேற்று முன் தினம் என இரண்டு நாட்கள் கூவத்தூர் சென்று எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை செய்த சசிகலா, இன்று மீண்டும் மூன்றாவது நாளாக அங்கு செல்கிறார்...

ஈசிஆரில் இளையதளபதி விஜய் மற்றும் நித்யாமேனன்

தமிழக அரசியல் களமே ஈசிஆரில் உள்ள ஒரு சொகுசு ரிசார்ட்டை வட்டமடித்து வரும் நிலையில் இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 61' படத்தின் படப்பிடிப்பும் ஈசிஆர் சாலையில் உள்ள ஒரு பகுதியில் நடைபெற்று வருகிறது.

சச்சின் - ரஹ்மான் இணைந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

மேரிகோம், தோனி போன்ற விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் மாபெரும் வெற்றியை பெற்றதை அடுத்து இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்பேன் சச்சின் தெண்டுல்கர் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படமும் கடந்த சில மாதங்களாக உருவாகி வந்தது.

நாங்கள் 1000 பன்னீர்செல்வத்தை பார்த்தவர்கள். சசிகலா ஆவேச பேச்சு

தமிழகத்தில் அடுத்து ஆட்சி அமைப்பது யார்? என்பதில் குழப்ப நிலை கடந்த ஒரு வாரமாக நீடித்து வருகிறது. எம்.எல்.ஏக்களின் ஆதரவை வைத்துள்ள சசிகலாவை கவர்னர் இதுவரை அழைக்கவில்லை. மிரட்டி ராஜினாமா செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தும் ஓபிஎஸ் அவர்களுக்கும் கவர்னர் எந்தவித பதிலை கூறாமல் அமைதி காத்து வருகிறார்.

கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் மயக்கம். ஆம்புலன்ஸ் விரைந்தது

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை ஆதரிப்பாக கூறப்படும் 100க்கும் மேற்பட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் கடந்த ஒரு வாரமாக ஈசிஆர் சாலையில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.