close
Choose your channels

சசிகலாவிடம் ஏதோ சிறப்பம்சம் இருக்கின்றது: தமிழ் நடிகர்

Thursday, January 28, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிகலா குறித்து அனைவரும் பேசுவதை பார்க்கும்போது அவரிடம் ஏதோ ஒரு சிறப்பு அம்சம் இருப்பதை காண்பிப்பதாக தமிழ் நடிகர் ஒருவர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார் என்பதும், அந்த சிறை தண்டனை முடிந்து நேற்று விடுதலை ஆனார் என்பதும் தெரிந்ததே. இருப்பினும் அவர் உடல் நலக்குறைவால் பெங்களூரில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்பதும் விரைவில் அவர் சென்னை திரும்புவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

சசிகலா சென்னை வந்தவுடன் அதிமுகவிலும், தமிழக அரசியலிலும் பல திடுக்கிடும் திருப்பங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட நடிகர் கருணாஸ் தற்போது சசிகலா குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்

சசிகலாவை மையப்படுத்திய அனைவரும் பேசுவது அவரிடம் ஏதோ சிறப்பம்சம் இருப்பதாகத்தான் அர்த்தம் என்று அவர் கூறியுள்ளார். இந்த நிலையில் சசிகலா சென்னை திரும்பிய உடன் அவரது தலைமையிலான கூட்டணியில் கருணாஸ் போட்டியிடுவார் என்றும் அவரது அமைப்புக்கு இரண்டு தொகுதிகள் கிடைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.