சரண் அடைந்தார் சசிகலா. இன்று முதல் 4 வருடங்களுக்கு ஜெயில் வாழ்க்கை

  • IndiaGlitz, [Wednesday,February 15 2017]

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, உச்சநீதிமன்ற உத்தரவின்படி சற்று முன்னர் பெங்களூர் பரப்பன அக்ராஹர நீதிமன்றத்தில் நீதிபதி முன்னர் சரண் அடைந்தார். அவருடன் இளவரசி சரண் அடைந்தார். சுதாகரன் இன்னும் நீதிமன்றத்தில் சரண் அடையவில்லை என்றும், உடல்நிலை சரியில்லை எனக்கூறி பெங்களூரு கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் சுதாகரன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி இன்று முதல் 4 வருடங்களுக்கு சரண் அடைந்தவர்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.

முன்னதாக சசிகலா பெங்களூரை சென்றடையும் முன்னர் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் சசிகலாவின் கணவர் நடராஜன் ஆகியோர் பெங்களூர் வந்தடைந்தனர்.

சசிகலா மற்றும் மூவர் இன்று சரண் அடைவதை அடுத்து பெங்களூர் பார்ப்பன அக்ராஹர பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்பட்டிருந்தது. அங்கு அதிமுக தொண்டர்கள் உள்பட பொதுமக்கள் பலர் குவிந்தனர்.

More News

கூவத்தூர் எம்.எல்.ஏக்களுக்கு விடுதலையா? உள்ளே நுழைந்தது அதிரடிப்படை

அதிமுக எம்.எல்.ஏக்கள் 100க்கும் மேற்பட்டவர்களை சசிகலா தரப்பு அணி கூவத்தூர் ரிசார்ட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் சசிகலா சரண் அடைய பெங்களூரை நோக்கி சென்றுவிட்டார். இந்நிலையில் அவர் சென்ற சிலமணி நேரங்களில் எம்.எல்.ஏக்களுக்கு விடுதலை கிடைக்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது...

சிறையில் சசிகலா: ஊதுபத்தி தயாரிக்கும் வேலை. தினசரி சம்பளம் ரூ.50

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள சசிகலா, பெங்களூர் நீதிமன்றத்தில் சரண் அடைய தற்போது சென்று கொண்டிருக்கின்றார். இந்நிலையில் சிறையில் அவருக்கு வழங்கப்படும் உணவு, மற்றும் பிற வசதிகள் குறித்த தகவல் வெளிவந்துள்ளது....

ஆட்சி அமைப்பது யார்? தமிழகத்தில் அடுத்து என்னென்ன வாய்ப்புகள். ஒரு அலசல்

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலமின்றி அப்பல்லோவில் அட்மிட் ஆனதில் இருந்து ஆரம்பித்த குழப்பம் இன்று வரை முடிவு தெரியாமல் நீண்டுகொண்டே உள்ளது.

எடப்பாடி பழனிச்சாமிக்கு நட்ராஜ் எம்.எல்.ஏ ஆதரவு

முன்னாள் காவல்துறை அதிகாரியும், மைலாப்பூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏவுமான நட்ராஜ், எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு கொடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

தினகரன் பொதுச்செயலாளரா? அதிமுக அமைப்பு செயலாளர் பதவி விலகல்

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தான் சிறையில் இருக்கும்போது கட்சியை கட்டுக்கோப்பாக வைத்திருக்க டிடிவி தினகரனை அதிமுகவின் துணைப்பொதுசெயலாளராக நியமனம் செய்தார்.