சசிகலா பதவியேற்பு விழா திடீர் ரத்து. காரணம் என்ன?

  • IndiaGlitz, [Tuesday,February 07 2017]

தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை திரும்புவார் என்றும், சசிகலாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பார் என்|றும் கூறப்பட்ட நிலையில் அவருடைய தமிழக வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால் சசிகலா பதவியேற்பது எப்போது என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

நேற்று முன் தினம் அதிமுக சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்ட அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா‌ இன்று காலை 11 மணிக்கு முதலமைச்சராக பொறுப்பேற்பார் என்று கூறப்பட்டது. இதற்காக, சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு மண்டபத்தில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இந்த பணிகளை அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, வேலுமணி ஆகியோர் நேற்று பார்வையிட்டனர்.

பதவியேற்பு விழாவுக்கான பாதூகாப்பு ஏற்பாடுகளை சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்நிலையில், கவர்னரின் தமிழக வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் சசிகலா இன்று பதவியேற்க வாய்ப்பில்லை என்பது உறுதியாகியுள்ளது.

டெல்லியில் அட்டர்னி ஜெனரலுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்த கவர்னர் வித்யாசாகர்ராவ் அங்கிருந்து நேராக மும்பை சென்றுவிட்டதாகவும், ஊட்டியில் இருந்த அவருடைய குடும்பத்தினர்களும் மும்பை சென்றுவிட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. கவர்னரின் தமிழக வருகை திடீர் ரத்து செய்யப்பட்டுள்ளதால் சசிகலா தரப்பு அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

More News

சசிகலா பதவியேற்பு குறித்து இந்திய அட்டர்னி ஜெனரல் கூறியது என்ன?

தமிழக முதல்வராக அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா இன்று காலை 11 மணிக்கு சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளதாக செய்திகள் வெளிவந்தன. இதற்காக சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபம் தயாரானது. அங்கு போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டது...

வெளியானது சீயான் விக்ரமின் 'சாமி 2' லோகோ

விக்ரம் நடித்த 'இருமுகன்' படத்தின் இசை வெளியீட்டு தினத்தில் கலந்து கொண்ட இயக்குனர் ஹரி, விக்ரம் நடிப்பில் 'சாமி 2' திரைப்படம் விரைவில் தொடங்கப்படும் என்று அறிவித்தார். இந்நிலையில் 'சாமி 2' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டில் லோகாவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்...

அனிருத்துக்கு கிடைத்த 'ஆப்பிள்' வாய்ப்பு

உலகம் முழுவதும் இசை சேவை வழங்கி வரும் இசை நிறுவனம் 'ஆப்பிள் மியூசிக்'. இந்நிறுவனத்தின் இந்தியாவின் விளம்பர அம்பாசிடராக இளம் இசைப்புயல் அனிருத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்...

சசிகலா முதல்வர் பதவியேற்பதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு

தமிழக முதல்வராக சசிகலா நாளை பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவர் முதல்வர் பதவியை ஏற்பது தார்மீக அடிப்படையில் முறையானது அல்ல என்று அரசியல் விமர்சகர்கள் உள்பட பலர் பேட்டியளித்தும், சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவு செய்தும் வருகின்றனர்...

'விஜய் 61' படத்தின் நாயகி திடீர் மாற்றம்?

இந்நிலையில் இந்த படத்தின் நாயகிகளில் ஒருவராக ஜோதிகா திடீரென மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக 'ஓகே கண்மணி' நாயகி நித்யாமேனன் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது...