சிறையில் சசிகலா: ஊதுபத்தி தயாரிக்கும் வேலை. தினசரி சம்பளம் ரூ.50

  • IndiaGlitz, [Wednesday,February 15 2017]

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள சசிகலா, பெங்களூர் நீதிமன்றத்தில் சரண் அடைய தற்போது சென்று கொண்டிருக்கின்றார். இந்நிலையில் சிறையில் அவருக்கு வழங்கப்படும் உணவு, மற்றும் பிற வசதிகள் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

பார்ப்பன அக்ராஹர சிறையை பொறுத்த வரையில் காலை உணவு 6.30 மணிக்கும், மதிய உணவு 11.30 மணிக்கும், டீ மாலை 4 மணிக்கும், இரவு உணவு 6.30 மணிக்கும் வழங்கப்படும்.

மேலும் சசிகலாவிற்கு சிறையில் ஊதுபத்தி, மெழுகுவர்த்தி தயாரிக்கும் பணி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் சிறையில் ஒரு நாள் சசிகலா வேலை பார்த்தால் அவருக்கு ஊதியமாக ரூ.50 வழங்கப்படும் என்றும் தெரிகிறது. ஞாயிறு கட்டாயமாக வேலை பார்த்தாக வேண்டும் எனவும் சிறை நிர்வாக விதிகளில் உள்ளதால் அவருக்கு விடுமுறை கிடையாது.

மேலும் சசிகலா அடைக்கப்படவுள்ள சிறையில் 2 பெண் கைதிகள் இருப்பார்கள் என்றும், சசிகலாவுக்கு மூன்று புடவைகள் வழங்கப்படும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

விஐபி அந்தஸ்து இதுவரை அவருக்கு வழங்கப்படவில்லை என்பதால் மேற்கண்ட வழிமுறைகள்தான் சசிகலாவுக்கும் கடைபிடிக்கப்படும் என கூறப்படுகிறது.

More News

ஆட்சி அமைப்பது யார்? தமிழகத்தில் அடுத்து என்னென்ன வாய்ப்புகள். ஒரு அலசல்

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலமின்றி அப்பல்லோவில் அட்மிட் ஆனதில் இருந்து ஆரம்பித்த குழப்பம் இன்று வரை முடிவு தெரியாமல் நீண்டுகொண்டே உள்ளது.

எடப்பாடி பழனிச்சாமிக்கு நட்ராஜ் எம்.எல்.ஏ ஆதரவு

முன்னாள் காவல்துறை அதிகாரியும், மைலாப்பூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏவுமான நட்ராஜ், எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு கொடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

தினகரன் பொதுச்செயலாளரா? அதிமுக அமைப்பு செயலாளர் பதவி விலகல்

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தான் சிறையில் இருக்கும்போது கட்சியை கட்டுக்கோப்பாக வைத்திருக்க டிடிவி தினகரனை அதிமுகவின் துணைப்பொதுசெயலாளராக நியமனம் செய்தார்.

சசிகலா: ஜெ. நினைவிடத்தில் சபதம். எம்.ஜி.ஆர் இல்லத்தில் தியானம்.

சுப்ரீம் கோர்ட் உத்தரவை அடுத்து பெங்களூர் கிளம்பிவிட்ட அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, அதற்கு முன்னதாக முன்னாள் முதல்வரும் தனது தோழியுமான ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு பின்னர் சபதம் ஏற்றார்.

சசிகலா செய்த சபதம் என்ன? கோகுல இந்திரா விளக்கம்

உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து பெங்களூர் நீதிமன்றத்தில் சரண் அடைய சற்று முன் கிளம்பிய அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா ஜெயலலிதா நினைவிடம் சென்று அங்கு அவருடைய சமாதி முன் கையால் ஓங்கி அடித்து சபதம் ஏற்றார்...