close
Choose your channels

அதிமுகவில் இருந்து சசிகலா, டிடிவி தினகரன் நீக்கம். அதிரடி நடவடிக்கை

Friday, February 17, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தின் ஆட்சியை கைப்பற்றுவது யார்? என்று கடந்த சில நாட்களாக சசிகலா தரப்பு அணிக்கும், ஓபிஎஸ் தரப்பு அணிக்கும் போட்டி இருந்த நிலையில் நேற்று சசிகலா ஆதரவாளர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்றதால் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக நீடிப்பது நாளை நடக்கவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பின் முடிவில்தான் இருக்கின்றது.

இந்நிலையில் அதிமுகவை கைப்பற்றுவது யார்? என்ற போட்டி தற்போது தொடங்கியுள்ளது. சசிகலா தரப்பு அதிமுக தாங்கள் தான் உண்மையான அதிமுக என்றும், ஓபிஎஸ் உள்பட அவரது ஆதரவாளர்கள் அனைவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாகவும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து சசிகலா, வெங்கடேஷ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் நீக்கப்படுவதாக அவைத்தலைவர் மதுசூதனன் சற்று முன்னர் அறிவித்துள்ளார். ஓபிஎஸ் அணியின் இந்த அதிரடி நடவடிக்கையால் மீண்டும் தமிழக அரசியல் களம் பரபரப்பு அடைந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.