சசிகலா: ஜெ. நினைவிடத்தில் சபதம். எம்.ஜி.ஆர் இல்லத்தில் தியானம்.

  • IndiaGlitz, [Wednesday,February 15 2017]

சுப்ரீம் கோர்ட் உத்தரவை அடுத்து பெங்களூர் கிளம்பிவிட்ட அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, அதற்கு முன்னதாக முன்னாள் முதல்வரும் தனது தோழியுமான ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு பின்னர் சபதம் ஏற்றார்.
பின்னர் அங்கிருந்து நேராக பெங்களூர் செல்லும் வழியில் ராமாபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர் வீட்டுக்கு சென்றார். எம்.ஜி.ஆர் வீட்டின் முன் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த சசிகலா, வீட்டினுள் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர் படம் அருகில் அமர்ந்து தியானம் செய்தார்.
பின்னர் அவரது கார் பெங்களூரை நோக்கி செல்ல ஆரம்பித்துள்ளது. இன்னும் மூன்று அல்லது நான்கு மணி நேரத்தில் அவர் பெங்களூர் நீதிமன்றத்தில் சரண் அடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

சசிகலா செய்த சபதம் என்ன? கோகுல இந்திரா விளக்கம்

உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து பெங்களூர் நீதிமன்றத்தில் சரண் அடைய சற்று முன் கிளம்பிய அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா ஜெயலலிதா நினைவிடம் சென்று அங்கு அவருடைய சமாதி முன் கையால் ஓங்கி அடித்து சபதம் ஏற்றார்...

சசிகலா மீது ஆள்கடத்தல் வழக்கு. கைது செய்யப்படுவாரா?

ஜெயலலிதா சமாதி மீது சபதம் செய்துவிட்டு பெங்களூர் சிறையை நோக்கி அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா சென்று கொண்டிருக்கும் நிலையில் அவர் மீது இன்னொரு வழக்கு புதியதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜெ. நினைவிடத்தில் சசிகலா சபதம். பெரும் பரபரப்பு

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, பெங்களூரில் சரண் அடைய கேட்டிருந்த அவகாசம் நிராகரிக்கப்பட்டதால் சற்று முன் பெங்களூருக்கு கிளம்பினார். செல்லும் வழியில் அவர் சென்னை மெரீனாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்றார்...

ஜெயலலிதாவின் 'போயஸ் கார்டன்' தற்போதைய நிலை.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போது 'போயஸ் கார்டன்' என்றாலே ஒரு தனி மதிப்பும் மரியாதையும் இருக்கும். போயஸ் கார்டனுக்குள் குறிப்பாக ஜெயலலிதா வாழ்ந்த 'வேதா இல்லம்' பகுதியில் யாரும் சாதாரணமாக நுழைந்துவிட முடியாது