ஓரளவுக்குத்தான் பொறுமை. அதற்கு மேல் செய்ய வேண்டிதை செய்வோம். சசிகலா

  • IndiaGlitz, [Saturday,February 11 2017]

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு மங்கிக்கொண்டே வருவதாக கூறப்படும் நிலையில் அவரது தரப்பு அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. போதாக்குறைக்கு ஓபிஎஸ் அணியும் வலுத்து வருவதால் சசிகலா சற்று முன்னர் போயஸ் கார்டன் இல்லத்தில் தொண்டர்கள் மத்தியில் உணர்ச்சியுடன் பேசினார். அவர் பேசியதாவது:
ஜெயலலிதா தற்போதும் நம் மத்தியில் இருக்கிறார். அவர் கட்சியில் உள்ள புல்லுறுவிகளை அடையாளம் காட்டி வருகிறார். அதிமுக ஒரு எஃகு கோட்டை, அதை யாரும் அசைக்க முடியாது. ஜெயலலிதாவும் நிறையப் போராட்டங்களைச் சந்தித்துத்தான் கட்சியை நடத்தினார். அதேபோல் நமக்கும் தற்போது சோதனை வந்திருக்கிறது. இருப்பினும் சோதனையை வென்று காட்டுவோம்.
ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து கொஞ்சம் அமைதி காக்கிறோம். ஓரளவுக்குத்தான் பொறுமை. அதற்கு மேல் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து செய்ய வேண்டியதைச் செய்வோம்' இவ்வாறு சசிகலா கூறினார்.,

More News

ஓபிஎஸ்- மாஃபா பாண்டியராஜன் சந்திப்பு. நேரில் ஆதரவு தெரிவித்தார்.

தமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு இதுவரை எம்.எல்.ஏக்கள் மட்டும் ஆதரவு கொடுத்து வந்த நிலையில் அவருக்கு ஆதரவு கொடுக்கும் முதல் கேபினட் அமைச்சராக மாஃபா பாண்டியராஜன் தனது ஆதரவை தெரிவித்தார் என்பதை சற்று முன்னர் பார்த்தோம்.

போயஸ் கார்டன் இல்லத்தை 24 மணி நேரத்தில் கைப்பற்ற வேண்டும். பிரபல அரசியல் கட்சி தலைவர்

தமிழக ஆளுனர் வித்யாசாகர் ராவ் அவர்களை சந்தித்துவிட்டு வந்து இரண்டு நாட்கள் ஆகியும் சசிகலாவுக்கு ஆட்சி அமைக்க அழைப்பு வரவில்லை.

சசிகலாவுக்கு எதிராக கையெழுத்து இயக்கம். ஓபிஎஸ்-இன் அடுத்த அதிரடி

தமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து கொண்டு வரும் நிலையில் அதிமுகவை கைப்பற்றுவது, ஆட்சி அமைப்பது மட்டுமின்றி ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தை சசிகலாவிடம் இருந்து மீட்டு நினைவு இல்லம் அமைக்க வேண்டும் என்பதும் அவரது கடமைகளில் ஒன்றாக இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்...

கூவத்தூர் விடுதியில் நடப்பது என்ன? காஞ்சிபுரம் ஏ.டி.எஸ்.பி. தமிழ்செல்வன் பேட்டி

கூவத்தூர் விடுதியில் தங்கியுள்ள எம்.எல்.ஏ.க்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தியதாகவும், சுய விருப்பத்தின் பேரிலேயே விடுதியில் அவர்கள் தங்கியிருந்ததாக தெரிவித்ததாகவும், தங்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை என அங்கு தங்கியிருந்த எம்.எல்.ஏக்கள் தெரிவித்ததாகவும் காஞ்சிபுரம் ஏ.டி.எஸ்.பி. தமிழ்செல்வன் சற்று முன்னர் பேட்டியளித&#

மாபா பாண்டியராஜனை அடுத்து ஓபிஎஸ் அணியில் மேலும் ஒரு அதிமுக விஐபி

முன்னாள் காவல்துறை அதிகாரியும், மைலாப்பூர் எம்.எல்.ஏவுமான கே.நட்ராஜ் அவர்களும் ஓபிஎஸ் அணிக்கு வரவுள்ளதாகவும், அவர் அனேகமாக இன்று மாலை முதல்வரை சந்தித்து தனது ஆதரவை தெரிவிக்கலாம் என்றும் கூறப்படுகிறது...