சசிகுமாரின் அடுத்த படத்தில் இணைந்த சரத்குமார்!

  • IndiaGlitz, [Saturday,June 08 2019]

பிரபல நடிகர் சசிகுமார் நடித்த 'நாடோடிகள் 2' மற்றும் 'கென்னடி கிளப்' ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் அவர் தற்போது நடித்து வரும் படங்களில் கல்பத்ரு பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் டைட்டில் வைக்கப்படாத படமும் ஒன்று. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடிக்க சரத்குமார் ஒப்பந்தமாகியுள்ளார். ஒரே படத்தில் சசிகுமாரும், சரத்குமாரும் இணைந்துள்ளதால் இந்த படம் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் ஆண்டனி நடித்த 'சலீம்' படத்தை இயக்கிய இயக்குனர் நிர்மல்குமார் இயக்கும் இந்த படத்திற்கு கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்கிறார். இவரும் 'சலீம்' படத்தில் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.