கடைசி மூச்சு இருக்கற வரைக்கும் நான் உங்கள பாத்துப்பேன்: 'டூரிஸ்ட் பேமிலி' டிரைலர்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் உருவான ’டூரிஸ்ட் பேமிலி’ என்ற படம் வரும் மே 1ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்நிலையில், இந்த படத்தின் டிரைலர் சற்று முன் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இலங்கையில் இருந்து சசிகுமார் மற்றும் சிம்ரன் தம்பதிகள் குடும்பத்துடன் தமிழ்நாட்டுக்கு வருகிறார்கள். இந்த நேரத்தில், அவர்களுக்கு இந்தியாவின் ஆதார் அட்டை உட்பட அனைத்து ஆவணங்களையும் போலியாக யோகி பாபு ஏற்பாடு செய்து தருகிறார். சசிகுமார் குடும்பத்தினர் இந்திய குடிமகன்கள் போல் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்த நிலையில் திடீரென சில பிரச்சனைகள் தோன்றுகிறது.
அந்த பிரச்சனைகளிலிருந்து அவர் எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதையாக இருக்கும் என, இரண்டரை நிமிட ட்ரெய்லரிலிருந்து தெரிய வருகிறது.
சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை அபிஷன் ஜிவிநித் என்பவர் இயக்கியுள்ளார். சீன் ரோல்டான் இசையில் உருவாகிய இந்த படம், சசிகுமாரின் இன்னொரு வெற்றிப் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments