close
Choose your channels

என்ன மாப்பிள்ளைங்களா, கொஞ்ச நேரம் ஜாலியா விளையாடலாமா? 'பகைவனுக்கு அருள்வாய்' டீசர்

Saturday, September 11, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் மற்றும் நடிகர் சசிகுமார் நடித்த படங்களில் ஒன்று ’பகைவனுக்கு அருள்வாய்’என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பது தெரிந்ததே. தற்போது தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்டு புதிய திரைப்படங்களும் ரிலீஸ் ஆகி வரும் நிலையில் ’பகைவனுக்கு அருள்வாய்’ திரைப்படமும் விரைவில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறாது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இந்த டீசரில் ஆரம்பத்திலேயே ’தோல்விக்கான காரணத்தை கண்டுபிடிக்கலைன்னா வெற்றியை நோக்கி ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது’ என்ற வசனம் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சிறைச்சாலையில் சசிகுமார் கைதியாக இருப்பதை வைத்து பார்க்கும்போது இந்த படத்தின் கதை முழுவதும் கிட்டத்தட்ட சிறைச்சாலையில் நடப்பது போன்று உருவாக்கப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

சசிகுமார் ஜோடியாக பிந்துமாதவி மற்றும் வாணி போஜன் நடித்துள்ள இந்த படத்தில் அனிஷ் என்பவர் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையில் கார்த்திக் கே தில்லை ஒளிப்பதிவில் காசிவிசுவநாதன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை 4 மங்கி ஸ்டூடியோ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.