close
Choose your channels

தீபாவளி ரேஸில் இணையும் சசிகுமார் படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

Wednesday, October 20, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வரும் தீபாவளி திருநாளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’அண்ணாத்த’ மற்றும் விஷால் நடித்த ’எனிமி’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சசிகுமார் நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் உருவான ’எம்ஜிஆர் மகன்’ என்ற திரைப்படம் வரும் தீபாவளி அன்று அதாவது நவம்பர் 4ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த படம் கடந்த ஏப்ரல் மாதமே ரிலீசுக்கு தயாராகி விட்ட போதிலும் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது என்பதும் தற்போது அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே அமேசான் ஓடிடியில் சூர்யா நடித்த ஜெய்பீம் என்ற திரைப்படம் தீபாவளிக்கு ரிலீசாக உள்ள நிலையில் ஹாட் ஸ்டார் ஓடிடியில் சசிகுமாரின் ’எம்ஜிஆர் மகன்’ ரிலீஸாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சசிகுமார் ஜோடியாக மிருணாளினி நடித்துள்ள இந்த படத்தில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பாடகர் அந்தோணிதாசன் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு வினோத் ரத்னசாமி ஒளிப்பதிவில் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.