பிப்ரவரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சசிகுமார் படம்

  • IndiaGlitz, [Sunday,January 20 2019]

இம்மாதம் பொங்கல் விருந்தாக சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட' மற்றும் தல அஜித்தின் 'விஸ்வாசம்' ஆகிய படங்கள் வெளியாகி இரண்டுமே வெற்றி பெற்றுள்ளது. இரண்டாவது வாரமாக இரண்டு படங்களுமே ஹவுஸ்புல் காட்சிகளாக திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் கடந்த வெள்ளியன்று தமிழ் படம் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை

இந்த நிலையில் பிப்ரவரியில் சுமார் 15 படங்களுக்கும் மேல் ரிலீஸ் ஆகவுள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். அவற்றில் கார்த்தியின் 'தேவ்', 'சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன்', ஜிவி பிரகாஷின் 'சர்வம் தாளமயம்', ராமின் 'பேரன்பு' ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்க படங்கள் ஆகும்

இந்த நிலையில் பிப்ரவரி ரிலீஸ் பட்டியலில் தற்போது சசிகுமாரின் 'நாடோடிகள் 2' திரைப்படமும் இணைந்துள்ளது. இன்று வெளியாகியுள்ள புதிய போஸ்டரில் இந்த படம் பிப்ரவரி வெளியீடு என்ற அறிவிப்பு உள்ளதுடன், இப்படத்தின் இசை வெளியீடு விரைவில் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சசிகுமார், அஞ்சலி, அதுல்யா ரவி, பரணி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை சமுத்திரக்கனி இயக்கியுள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையில் ஏகாம்பரம் ஒளிப்பதிவில் ரமேஷ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை எஸ்.நந்தகோபால் தயாரித்துள்ளார்.

 

More News

'பேட்ட' படம் குறித்து தமிழக அரசுக்கு விஷால் வைத்த கோரிக்கை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் கடந்த 10ஆம் தேதி வெளியாகி இரண்டாவது வாரமாக ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் ராஜினாமா? அமெரிக்க பத்திரிகை ஏற்படுத்திய பரபரப்பு

கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் அனைத்து கருத்துக்கணிப்புகளும், பத்திரிகைகளும் ஹிலாரி கிளிண்டன் தான் வெற்றி பெறுவார்

முதல்வரை கேள்வி கேட்கும் துணிவு உண்டா? கமலுக்கு ஹெச்.ராஜா கேள்வி

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனை அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் அவ்வபோது விமர்சனம் செய்வதும், கமல்ஹாசன் அதற்கு பதிலடி கொடுப்பதும் அவ்வப்போது நடைபெற்று வரும் நிகழ்வுகள் என்பது தெரிந்ததே

'தளபதி 63' படத்தின் பூஜை தேதி குறித்த தகவல்

'தளபதி விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் விஜய்யின் அடுத்த படமான 'தளபதி 63' படத்தின் ஆரம்பகட்ட பணிகளை இயக்குனர் அட்லி செய்து வந்தார்.

'காஞ்சனா 3' ரிலீஸ் தேதி அறிவிப்பு

ராகவா லாரன்ஸ் நடித்து வரும் 'காஞ்சனா 3' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது