அக்டோபர் 1ல் ரிலீஸாகும் சசிகுமாரின் அடுத்த படம்!

  • IndiaGlitz, [Monday,September 20 2021]

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரும் இயக்குனருமான சசிகுமார் தற்போது ஒரே நேரத்தில் சுமார் 6 படங்களுக்கு மேலாக நடித்து வருகிறார் என்பதும், அவற்றில் ஒரு சில படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சசிகுமார் நடித்து முடித்து திரைக்கு தயாராக உள்ள திரைப்படங்களில் ஒன்று ’ராஜவம்சம்’. இந்த படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அக்டோபர் 1ஆம் தேதி முதல் திரையரங்குகளில் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு, ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரும் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

சசிகுமார் ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ள இந்த படத்தை கதிர்வேல் என்பவர் இயக்கியுள்ளார். சாம் சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பதும், இந்த படத்தை செந்தூர் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

7 கண்டங்கள், 64 நாடுகள்: பைக்கில் பயணம் செய்ய அஜித் திட்டம்?

7 கண்டங்கள் மற்றும் 64 நாடுகளில் பைக்கில் பயணம் செய்ய அஜித் திட்டமிட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

அனைத்து சாதியினர் அர்ச்சகர் கதையா? 'என்னங்க சார் உங்க சட்டம்' டிரைலர்

 சமீபத்தில் திமுக அரசு பதவியேற்றவுடன் பல்வேறு அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி வந்தது என்பது தெரிந்ததே. அந்த வகையில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை இயற்றியது

கணவர், குழந்தைகளுடன் பீச் பிகினியில் சமீரா: வைரல் புகைப்படங்கள்!

கணவர் மற்றும் குழந்தைகளுடன் பீச்சில் பிகினி உடன் இருக்கும் புகைப்படங்களை நடிகை சமீரா ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

என் மகனுக்கு கண்டிப்பாக இதை சொல்லி கொடுப்பேன்: சிவகார்த்திகேயன்

பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை என் மகனுக்கு நான் கண்டிப்பாக சொல்லிக் கொடுப்பேன் என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளது அனைவரையும் பாராட்டும் வகையில் உள்ளது.

வேகமாக வளரும் சிம்பு திரைப்படம்: அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கே?

சிம்பு நடிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் 'வெந்து தணிந்தது காடு' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது என்பது தெரிந்ததே.