ஜப்பானில் ரிலீஸ் ஆகும் சசிகுமாரின் 'டூரிஸ்ட் பேமிலி'.. தேதி அறிவிப்பு..!


Send us your feedback to audioarticles@vaarta.com


சமீபத்தில் வெளியான 'டூரிஸ்ட் பேமிலி' என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும், இந்த படம் 15 நாட்களில் 50 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்ததாக படக்குழுவினர்கள் அறிவித்தனர் என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் வெற்றி நடை போடும் 'டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படம் அடுத்த கட்டமாக ஜப்பானில் ரிலீசாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இந்த படத்தை உலகம் முழுவதும் வெளியிட்ட நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில், ஜப்பானில் இந்த படம் மே 24ஆம் தேதி திரையிடப்படுவதாக அறிவித்துள்ளது. மேலும், இந்த வாரயிறுதியில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் போலவே ஜப்பானிலும், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அமெரிக்காவிலும், பிரிட்டனிலும் இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments