close
Choose your channels

சசிகுமாரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு

Tuesday, April 9, 2019 • தமிழ் Comments

நடிகரும் இயக்குனருமான சசிகுமார் நடிப்பில் 'நாடோடிகள் 2', 'கொம்பு வச்ச சிங்கம்' மற்றும் 'கென்னடி கிளப்' ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. இந்த மூன்று படங்களுமே அடுத்தடுத்து வெளியாக வாய்ப்பு உள்ள நிலையில் இன்று அவர் நடிக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விஜய் ஆண்டனி நடித்த 'சலீம்' படத்தை இயக்கிய இயக்குனர் நிர்மல்குமார் இயக்கவுள்ள அடுத்த படத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்கவுள்ளார். இந்த படத்தை கல்பத்ரு பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்நிறுவனம் தயாரிக்கும் மூன்றாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு நாளை நடைபெறவுள்ளது. மேலும் இந்த படத்தின் நாயகி உள்பட மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

Get Breaking News Alerts From IndiaGlitz