சசிகுமாரின் அடுத்த படம்: இயக்குனர், இசையமைப்பாளர் அறிவிப்பு!

  • IndiaGlitz, [Tuesday,July 13 2021]

கடந்த 2008ஆம் ஆண்டில் ’சுப்பிரமணியபுரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என அறிமுகமானவர் சசிகுமார். அதன்பின்னர் ’நாடோடிகள்’ ’போராளி’ ’சுந்தரபாண்டியன்’ ’நிமிர்ந்து நில்’ ’பிரம்மன்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார் என்பதும் ஒரு சில திரைப்படங்களை தயாரித்து இயக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது சசிகுமார் ’ராஜவம்சம்’ ’எம்ஜிஆர் மகன்’ ’பகைவனுக்கு அருள்வாய்’ ’கொம்பு வச்ச சிங்கம்டா’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சசிகுமார் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. சசிகுமாரின் அடுத்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்பதும், இந்நிறுவனத்தின் ஐந்தாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மெலும் இந்த படத்தை ஹேமந்த் என்பவர் இயக்கி உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்திற்கு டி இமான் இசையமைக்க உள்ளார். இந்த படத்தின் பூஜை குறித்த புகைப்படங்களை இசையமைப்பாளர் டி இமான் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட நிலையில் இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. சசிகுமார் ஜோடியாக நடிக்கும் நடிகை உள்பட மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 

More News

மக்கள் அடைந்த கஷ்டத்தால் கண்ணீர் வந்தது....! சுந்தர் பிச்சை உருக்கமான பேச்சு....!

கொரோனா காலத்தில், இந்தியாவில் நடந்தேறிய மக்களின் இறப்பு செய்தி, எனக்கு கண்ணீர் வரவழைத்தது என கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.

பண மழையில் நனையும் கிரிக்கெட்டர்கள்! டாப் 10 லிஸ்ட்டில் உள்ள இந்தியர் யார் தெரியுமா?

உலக அளவில் டென்னிஸ் வீரர்களைக் காட்டிலும் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பளம் குறைவாகத்தான் வழங்கப் படுகிறது.

விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம்: உண்மையான ஹீரோக்களாக இருக்க நீதிமன்றம் அறிவுரை!

நடிகர் விஜய்க்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

வார்த்தை வித்தகன்...! வரிகளில் வசியம் செய்யும் வைரமுத்துவிற்கு பிறந்தநாள் வாழ்த்து....!

கவிதை என்றாலே வைரமுத்து, வைரமுத்து என்றாலே தமிழ்ப்பற்று என தமிழ்நெஞ்சுகளில் நீங்கா இடம்பிடித்திருப்பவர்,

சென்னை கார்பரேஷன் பள்ளிகளில் புது புரட்சி… ஏட்டுக் கல்விக்கு மாற்றாக மாஸ் அறிவிப்பு!

நம்முடைய கல்வி முறையில் அனுபவ அறிவு குறைவாக இருக்கிறது என்பதுபோன்ற குற்றச்சாட்டு தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.