சசிகுமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. இன்னொரு சூப்பர் ஹிட்டா?


Send us your feedback to audioarticles@vaarta.com


சசிகுமார் நடித்த 'டூரிஸ்ட் பேமிலி’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலையும் வாரி குவித்துள்ள நிலையில் அவர் நடித்த இன்னொரு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு இன்னொரு சூப்பர் ஹிட் படம் தயாராகிவிட்டது என்று ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சசிகுமார் நடிப்பில் சத்ய சிவா இயக்கத்தில் உருவான ’ப்ரீடம்’ என்ற திரைப்படம் ரிலீசுக்கு கடந்து சில மாதங்களுக்கு முன்பே தயாரான நிலையில் தற்போது இந்த படம் ஜூலை 10ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
’டூரிஸ்ட் பேமிலி’ மிகப்பெரிய வெற்றி பெற்றதால் அவருடைய அடுத்த படமான ’ப்ரீடம்’ மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை, அதில் ஈழத் தமிழர்களின் தொடர்பு உள்ளிட்ட காட்சிகளுடன் ’ப்ரீடம்’ படத்தின் டிரைலர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது இந்த படத்தை விரைவில் திரையரங்குகளில் காணலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சசிகுமார், லிஜோமோல் ஜோஸ், மாளவிகா அவினாஷ், போஸ் வெங்கட், ரமேஷ் கண்ணா, ’பாய்ஸ்’ மணிகண்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
உதயகுமார் ஒளிப்பதிவு, ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு என பலர் பணியாற்றி உருவாக்கிய படமாக இது இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments