சசிகுமாரின் அடுத்த படத்தின் இயக்குனர், இசையமைப்பாளர் அறிவிப்பு!

  • IndiaGlitz, [Tuesday,February 15 2022]

நடிகரும் இயக்குனருமான சசிகுமார் ’கொம்பு வச்ச சிங்கம்’ ’பகைவனுக்கு அருள்வாய்’ உள்பட 4 திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் உருவாகி வரும் ’காமன்மேன்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சசிகுமார் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. சசிகுமார் நடிக்கும் அடுத்த படத்தை தங்கம் பா சரவணன் என்பவர் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே ’அஞ்சல’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தை மோகன் என்பவர் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் சசிகுமார் ஜோடியாக அனன்யா நாகல்லா என்பவர் நடிக்க உள்ளார். இவர் ஏற்கனவே தெலுங்கில் ஐந்து படங்கள் நடித்து இருக்கும் நிலையில் தமிழில் இவர் அறிமுகமாகும் முதல் படம் என்றும், இந்த படத்தில் மற்றொரு பிரபல நடிகை நடிக்க இருப்பதாகவும் அவரது தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடைபெற்ற நிலையில் படப்பிடிப்பும் தொடங்கியுள்ளதாகவும் இன்னும் ஓரிரு மாதங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

More News

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் மியூசிக் வீடியோ: பாடிய பிரபலம் யார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மியூசிக் வீடியோ ஒன்றை இயக்கி வருகிறார் என்பதும் இந்த மியூசிக் வீடியோவின் படப்பிடிப்பு ஆந்திராவில் உள்ள ராமோஜிராவ்

மூன்று வருடங்களுக்கு பின் முடிவுக்கு வந்த விக்ரம் படம்: இயக்குனர் நன்றி!

மூன்று வருடங்களாக நடைபெற்று வந்த விக்ரம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக இயக்குனர் தனது டுவிட்டரில் தெரிவித்து அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார். 

23 ஆவது திருமண நாள் இன்று… மறைந்த கணவரை நினைத்து உருகும் பிரபல நடிகை!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகை, தொகுப்பாளினி மற்றும் கிரிக்கெட்

முதல்முறையாக மனைவியுடன் இருக்கும் புகைப்படம் வெளியிட்ட நடிகர் ஜீவா!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் நடிகர் ஜீவா முதல்முறையாக

விஜய் ஆண்டனி படத்தின் டைட்டில் லுக்கை வெளியிட்ட ஆர்யா!

விஜய் ஆண்டனி நடிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படத்தின் டைட்டில் லுக்கை நடிகர் ஆர்யா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.