எனது வாழ்க்கை பாதையை மாற்றியவர் இவர்தான்: இயக்குனர் பாண்டிராஜ் பெருமிதம்

  • IndiaGlitz, [Tuesday,September 29 2020]

இயக்குனர் பாண்டிராஜ் ’பசங்க’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் என்பதும் அந்தப் படம் இரண்டு தேசிய விருதுகளை பெற்றது என்பதும் தெரிந்ததே. அந்த படத்திற்கு பின்னர் அவர் பல வெற்றி படங்களை இயக்கினார் என்பதும் சமீபத்தில் அவர் இயக்கிய ’நம்ம வீட்டு பிள்ளை’ என்ற திரைப்படம் அனைத்து தரப்பினரையும் கவர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பிரபல நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் சசிகுமார் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதனை அடுத்து ஒட்டுமொத்த திரையுலகமும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்த நிலையில் இயக்குனர் பாண்டிராஜும் இயக்குனர் சசிகுமாருக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்

எனது வாழ்க்கையை ஒருவர் தலைகீழாக திசை திருப்பியது யார் என்றால் அது சசிகுமார் தான் என்று அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இயக்குநர் பாண்டிராஜின் முதல் திரைப்படமான ’பசங்க’ திரைப்படத்தை தயாரித்தது சசிகுமாரின் நிறுவனம் தான் என்பதும் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இந்த படத்திற்காக கிடைத்த தேசிய விருதை முன்னாள் ஜனாதிபதி பிரதிபா பட்டேல் அவர்களிடம் சசிகுமாருடன் பெற்ற புகைப்படத்தையும் பாண்டிராஜ் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

மேடையில் மனைவியை கிண்டல் செய்த எஸ்பிபி: அரிய வீடியோ வைரல்!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் சமீபத்தில் காலமான நிலையில் அவருடன் பழகிய நாட்கள், அவருடன் கலந்துகொண்ட அனுபவங்கள் குறித்து

கொரனோ வந்தால் மம்தா பானர்ஜியை கட்டிப்பிடிப்பேன்: பாஜக பிரமுகரின் சர்ச்சை பேச்சு

பாஜக பிரமுகர்கள் சிலர் கடந்த 6 ஆண்டுகளாக அவ்வப்போது சர்ச்சைக்கு சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகின்றனர் என்பதும் சர்ச்சைக்குரிய பேச்சால் அவர்கள்

அஜித் இறுதிச்சடங்கிற்கு வராதது குறித்து விளக்கமளித்த எஸ்பிபி சரண்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் சமீபத்தில் காலமான நிலையில் ஒட்டுமொத்த இந்திய திரையுலகமும் அவருக்காக இரங்கல் தெரிவித்தது.

நாம் தமிழர் கட்சியின் சீமான் மருத்துவமனையில் அனுமதி!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளி வந்திருக்கும் செய்தி அவரது கட்சியின் தொண்டர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது 

காகிதங்களை வைத்து போர் தளவாடங்களை வடிவமைக்கும் இளைஞர்… கலைநயத்துக்கு குவியும் பாராட்டு!!!

புதுக்கோட்டை வாலிபர் ஒருவர் வெறுமனே காகிதங்களை வைத்து போர் தளவாடங்கள் முதற்கொண்டு இந்தியப் பாதுகாப்புத் துறையில் உள்ள அத்தனைப் பொருட்களின் மாதிரியையும் வடிவமைத்து விடுகிறார்.