சசிகுமாருடன் மீண்டும் இணையும் வெற்றிப்பட இயக்குனர்

  • IndiaGlitz, [Friday,February 24 2017]

சசிகுமார் நடித்த 'குட்டிப்புலி' படத்தின் மூலம் கோலிவுட் திரையுலகில் இயக்குனராக காலடி எடுத்து வைத்த முத்தையா அதன்பின்னர் கார்த்தி நடித்த 'கொம்பன்' மற்றும் விஷால் நடித்த 'மருது' ஆகிய வெ'ற்றிப்படங்களை இயக்கினார்.

கிராமத்து கதையை தத்ரூபமாக இயக்கும் முத்தையா தற்போது அடுத்த படத்திற்காக தயாராகி விட்டார். அவருடைய அடுத்த படத்தின் டைட்டில் 'கொடிவீரன்' என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் சசிகுமார் நடிக்கவுள்ளதாகவும் அவருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகையின் தேர்வு நடந்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் படப்பிடிப்பு நடத்தும் இயக்குனர் முத்தையா இந்த படத்தையும் சிவகெங்கை அருகேயுள்ள ஒரு கிராமத்தில் இருந்துதான் தொடங்கவுள்ளாராம். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் முதல் தொடங்கவுள்ளதாகவும், இந்த படம் குறித்த அறிவிப்பு மிகவிரைவில் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

More News

விஜய் ஆண்டனியின் எமன்: பாசிட்டிவ் விமர்சனமும் தமிழக அரசின் வரிவிலக்கு...

விஜய் ஆண்டனி நடித்த 'பிச்சைக்காரன்' மற்றும் 'சைத்தான்' ஆகிய படங்களின் சூப்பர் ஹிட் வெற்றிக்கு பின்னர் இன்று அவர் நடித்த அடுத்தபடமான 'எமன்' உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகின்றது....

மு.க.ஸ்டாலின் சந்திப்பு எதிரொலி: ரகசிய வாக்கெடுப்புக்கு ஜனாதிபதி உத்தரவா?

தமிழக சட்டப்பேரவையில் கடந்த வாரம் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஜனநாயக படுகொலை நடந்ததாகவும், ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற தங்கள் கோரிக்கையை ஏற்காமல் தாங்கள் சபைக்காவலர்கள் மற்றும் போலீசாரால் வெளியேற்றப்பட்டதாகவும் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியிருந்தார்...

நாளை முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடல் குறித்த விபரங்கள்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமைச்செயலகத்தில் போட்ட முதல் கையெழுத்து '500 டாஸ்மாக் கடைகளை மூடும் உத்தரவு என்பது அறிந்ததே...

அமைச்சர் ஜெயகுமாருக்கு கூடுதல் பொறுப்பு. நிதியமைச்சரும் அவர்தான்

மீன் வளத்துறை அமைச்சராக இதுவரை இருந்த அமைச்சர் ஜெயக்குமாருக்கு கூடுதலாக நிதித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதி அமைச்சராக பொறுப்பேற்றிருந்த ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அமைச்சர் பொறுப்பில் இருந்தும் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதால் அவருடைய துறையை இதுவரை முதல்வரே ஏற்றிருந்தார்...

சீமக்கருவேல மரங்களை அழிக்கும் நடவடிக்கையில் விஷால்

தமிழகத்தை எதிர்நோக்கியுள்ள அபாயங்களில் மிகவும் முக்கியமானது சீமக்கருவேல மரங்கள். பொன் விளையும் பூமியை மலடாக்கும் அபாயம் இந்த சீமக்கருவேல மரங்களால் உண்டு என்பதால் இதுகுறித்த விழிப்புணர்வை சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் இடையே பரப்பி வருகின்ரனர். குறிப்பாக மாணவர்கள், சமூக நல ஆர்வலர்கள், ஒருசில அரசியல் கட்சி தலைவர்கள் சீமக்க&#