close
Choose your channels

சூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் சதீஷை அடித்த சாக்சி அகர்வால்

Tuesday, October 15, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆர்யா, சாயிஷா நடித்து வரும் ‘டெடி’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் நடிகர் சதீஷ் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சதீஷின் சமூக வலைத்தள பக்கத்தில் சற்றுமுன் ஒரு வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் ‘டெடி’ படப்பிடிப்பின்போது சதீஷ் தனது மொபைல் போனை பார்த்து ‘ஹவ்வா ஹவ்வா’ என்ற பாடலை பாடி கொண்டிருக்கின்றார். அப்போது அங்கு திடீரென வரும் பிக்பாஸ் புகழ் சாக்சி அகர்வாலை பார்த்ததும் பாடலை வேறு மாதிரியாக பாடுகிறார். இதனால் கடுப்பான சாக்சி, சதீஷை செல்லமாக அடிப்பது போன்ற காட்சி அந்த வீடியோவில் உள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் சாக்சி அகர்வால் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்யா, சாயிஷா இணைந்து நடிக்கும் ’டெடி’ படத்தை சக்தி செளந்திரராஜன் இயக்கி வருகிறார். டி.இமான் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவு பெறவுள்ளது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.