நடிகர் சதீஷை 'ஆன்ட்டி'என அழைக்கும் அவரது மகள்.. காமெடி வீடியோ வைரல்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


பொதுவாக ஒரு குழந்தை தன்னுடைய அப்பாவை "அப்பா" என்று அழைக்கும் நிலையில், நடிகர் சதீஷின் மகள் அவரை "அப்பா ஆண்டி" என அழைக்கும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரை உலகின் முக்கியமான காமெடி நடிகர்களில் ஒருவராக இருக்கும் சதீஷ், கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாகவும் நடித்து வருகிறார். அவர் ஹீரோவாக நடித்த சில படங்கள் வெற்றி பெற்றதையடுத்து, தொடர்ந்து ஹீரோவாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சதீஷ், அவ்வப்போது தனது மகள் குறித்த புகைப்படங்கள், வீடியோக்களை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில், சற்று முன் அவர் பதிவு செய்த வீடியோ ஒன்றில், ’தமிழ் படம் 2’ படத்தில் பெண் வேடத்தில் நடித்த புகைப்படத்தை மகளிடம் காட்டி, "இது யார்?" என கேட்டார்.
அதற்கு அவர் மகள், “ஆன்ட்டி” என பதிலளிக்கிறார். அதன் பிறகு, அந்த புகைப்படத்தை தனது முகத்துக்கு நேராக வைத்து, “இப்போது யார்?” என கேட்கிறார். அதற்கும் குழந்தை, “அப்பா ஆண்ட்டி” என பதிலளிக்க, சதீஷ் சிரித்து கொண்டே “அப்பா ஆன்ட்டியா?” என கேட்கும் காட்சியுடன் இந்த வீடியோ முடிகிறது.
இந்த வீடியோக்கு ஏராளமான லைக்குகள், கமெண்ட்கள் குவிந்து வருகின்றன. "ஆன்ட்டி அப்பா", "அப்பா பொண்ணு", "அப்பா ஆன்ட்டி" என ரசிகர்கள் பல்வேறு கமெண்ட்கள் இந்த வீடியோவுக்கு பதிவிட்டு வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments