close
Choose your channels

ஹர்பஜன்சிங்-லாஸ்லியா படத்தில் இணைந்த பிரபல நடிகர்

Tuesday, February 18, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் முதன்முதலாக ஒரு தமிழ் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் என்றும், பிரெண்ட்ஷிப் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள அந்த படத்தில் நாயகியாக பிக்பாஸ் புகழ் லாஸ்லியா நடிக்கவுள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் இந்த படத்தில் நேற்று ஆக்சன் கிங் அர்ஜுன் இணைந்தார் என்ற செய்தி இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. இதனை அடுத்து தற்போது இந்த படத்தில் மேலும் ஒரு பிரபல நடிகர் இணைந்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான சதீஷ் இந்த படத்தில் இணைந்துள்ளதாக சற்றுமுன் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்

இந்த படத்தில் மேலும் சிலர் இணைய இருப்பதாகவும் இது குறித்த தகவல்களை விரைவில் படக்குழுவினர் வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஜான் பால் மற்றும் ஷாம் சூர்யா இயக்கத்தில் உருவாகவிருக்கும் இந்த படத்தை ஸ்டாலின் என்பவர் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் முதல் தொடங்கவுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.