close
Choose your channels

ஒரே ஒரு ஷாட்டுக்கு வெயிட்டிங்: படப்பிடிப்புக்கு போகாமல் கிரிக்கெட் பார்த்து கொண்டிருந்த நடிகர்!

Tuesday, January 19, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையே இன்று பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கடைசி நேரத்தில் இந்தியா 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. தமிழக வீரர்களான நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அறிமுகமான இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது பெருமைக்குரியதாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் கிரிக்கெட் போட்டி பார்க்கும் ஆர்வத்தில் படப்பிடிப்புக்கான ஷாட் ரெடி ஆகியும் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்த வீடியோ ஒன்றை நடிகர் சதீஷ் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் ’ இந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் கடைசி நேர ஆட்டத்தை சதீஷ், அசோக் செல்வன், ப்ரியா பவானிசங்கர் ஆகியோர் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது படக்குழுவினர்களிடம் இருந்து ஒருவர் வந்து ’ஷாட் ரெடி’ என்று கூற ’நாங்களும் ஒரே ஒரு ஷாட்டுக்கு தான் வெயிட்டிங், கொஞ்சம் பொறுங்கள்’ என்று கூறி மொபைல் போனில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ரிஷப் பண்ட் வின்னிங் ஷாட்டான பவுண்டரியை அடித்த உடன் சதீஷ் மகிழ்ச்சியுடன் அருகிலிருந்த அசோக்செல்வன் மற்றும் பிரியா பவானி சங்கர் உடன் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அதன்பின் போகலாம் போகலாம் என படப்பிடிப்புக்கு போகலாம் என்று சதீஷ் கூறுவதுடன் அந்த வீடியோ முடிவடைகிறது.

சதீஷ் பதிவு செய்துள்ள இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.