14 வருடங்களுக்கு முன் உதவி இயக்குனராக பணிபுரிந்த பிரபல காமெடி நடிகர்: வைரலாகும் புகைப்படம்

  • IndiaGlitz, [Monday,August 17 2020]

14 வருடங்களுக்கு முன் தான் உதவி இயக்குனராக பணிபுரிந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை பிரபல காமெடி நடிகர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடந்த 2006 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ’ஜெர்ரி’. எஸ்.பி.கந்தன் என்பவர் இயக்கிய இந்த படத்தில் ஜித்தன் ரமேஷ் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் அறிமுகமானவர் தான் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் சதீஷ் என்பது குறிப்பிடத்தக்கது

ஆனால் இந்தப் படத்தில் தான் நடிகராக அறிமுகமானது மட்டுமின்றி உதவி இயக்குனராகவும் பணிபுரிந்ததாகவும் அதுகுறித்த புகைப்படத்தையும் நடிகர் சதீஷ் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். 14 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் தற்போது நடிகர் சதீஷ், ரஜினியின் ’அண்ணாத்த’ கமலஹாசனின் ’இந்தியன் 2’ ஆர்யாவின் ‘டெடி’ உள்பட பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் கொரோனா வைரஸ் லாக்டவுன் முடிந்தவுடன் இந்த படங்களின் படப்பிடிப்புகள் தொடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

தல தோனி 7.29க்கு ஓய்வை அறிவிக்க இதுதான் காரணமா? பரபரப்பு தகவல்

கடந்த 15ஆம் தேதி இந்திய நாடே சுதந்திர தின விழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்த போது சரியாக இரவு 7.29 மணிக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ஓய்வு முடிவை தல தோனி அறிவித்தார்

பேண்ட்டை திருப்பி போட்டுட்டாரா ஷிவானி? நெட்டிசன்கள் கிண்டல்

சின்னத்திரையில் பிரபலமான ஷிவானி நாராயணன் தினமும் தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

பேஸ்புக் பழக்கத்தில் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம்: கர்ப்பமானதும் கைவிட்டு போன கணவர்!

ஃபேஸ்புக் பழக்கத்தில் திருமணம் செய்து கொண்ட பெண் ஒருவர் கர்ப்பமானதும் தனது கணவர் தன்னை விட்டு போனதால் தற்போது பெரும் சிக்கலில் உள்ளார் 

கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பிய தமிழ் நடிகர்-அரசியல்வாதி!

தமிழகத்தில் தினந்தோறும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் நூற்றுக்கும் மேலானவர்கள் கொரோனாவுக்கு பலியாகி வருகின்றனர்

ரஜினி-கமல் இணையும் படம் குறித்து லோகேஷ் கனகராஜின் பதில்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிப்பில் 'மாஸ்டர்' இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படம்