சிங்கம் படம் பார்த்தியா? நம்ம சிவகுமார் பையன் சூர்யா நடிச்சது.. 'சத்திய சோதனை' டிரைலர்..!

  • IndiaGlitz, [Tuesday,July 11 2023]

’ஒரு கிடாயின் கருணை மனு’ என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சுரேஷ் சங்கையா’ இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் ’சத்திய சோதனை’. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கிராமம் ஒன்றில் மர்மமான முறையில் நடக்கும் கொலையை தற்செயலாக பார்க்கும் பிரேம்ஜியை அவர்தான் கொலை செய்தார் என போலீசார் பிடித்து வைத்துக் கொள்கின்றனர். அந்த கொலை பழியில் இருந்து பிரேம்ஜி தப்பித்தாரா? உண்மையான கொலையாளிகள் பிடிபட்டார்களா? என்பதை காமெடி கலந்த திகில் படமாக இயக்குனர் சங்கையா இந்த படத்தை இயக்கி உள்ளார்.

பிரேம்ஜி, ரேஷ்மா, ஹரிதா உள்ளிட்ட, கேஜி மோகன், செல்வ முருகன், லட்சுமி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ரகுராம் இசையமைத்துள்ளார். சரண் ஒளிப்பதிவில் வெங்கட்ராஜன் படத்தொகுப்பில் உருவாகிய இந்த படம் வரும் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

காட்டன் புடவை கட்டி அசல் பெண் போலவே இருக்கும்… AI- செயற்கை செய்தி வாசிப்பாளர்கள்?

AI- தொழில்நுட்பத்தால் உண்டான செயற்கை நுண்ணறிவு குறித்த செய்திகளை அடிக்கடி ஊடகங்களில் பார்த்து வருகிறோம்.

ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீண்டும் கைது: இம்முறை என்ன காரணம்?

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஸ்ரீரங்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கனல் கண்ணன் கைது செய்யப்பட்டார்.

ஓடிடியில் திரைப்படம் வெளியிட்டால் எங்களுக்கு பங்கு வேண்டும்: திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை..!

ஓடிடியில் திரைப்படங்கள் வெளியிட்டால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு பங்கு வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்திருப்பது பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கோவில் கோவிலாக சுற்றுப்பயணம்: எஸ்.எஸ்.ராஜமௌலியின் நெகிழ்ச்சியான அனுபவம்..!

தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களுக்கு குடும்பத்துடன் சுற்றுப்பயணம் செய்த பிரம்மாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி தனது நெகிழ்ச்சியான அனுபவம் குறித்து சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

சீரியல் விட்டே போயிடலாம்னு நினைச்சேன் - நடிகை சத்யா

எதிர்நீச்சல் தொடரில் ஆதிரை என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் தான் நடிகை சத்யா.