close
Choose your channels

சத்ருஹன்சின்ஹா போட்டியிடும் தொகுதி அறிவிப்பு

Saturday, April 6, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த பல ஆண்டுகளாக பாஜகவில் இருந்த பிரபல பாலிவுட் நடிகர் சத்ருஹன்சின்ஹா, சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாக அறிவித்தார். அதன்படி நேற்று அவர் அதிகாரபூர்வமாக காங்கிரஸ் கட்சியில் இணைந்த நிலையில் இன்று அவர் போட்டியிடும் தொகுதி அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் அடுத்த வேட்பாளர் பட்டியல் சற்றுமுன் வெளியாகியுள்ளது. ஐந்து பேர் கொண்ட இந்த வேட்பாளர் பட்டியலில் சத்ருஹன்சின்ஹா, பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவில் போட்டியிட போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் விரைவில் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிக்கவிருப்பதாகவும் அவருடை தொகுதியில் ராகுல்காந்தி விரைவில் பிரச்சாரம் செய்வார் என்றும் கூறப்படுகிறது. இந்த தொகுதியில் பாஜக வேட்பாளராக ரவிசங்கர் பிரசாத் போட்டியிடுகிறார்.

இதே பாட்னா தொகுதியில்தான் கடந்த 2009ஆம் ஆண்டு மற்றும் 2014ஆம் ஆண்டு சத்ருஹன்சின்ஹா பாஜக எம்பியாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறை அவர் காங்கிரஸ் எம்பியாக தேர்வு செய்யப்படுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.