close
Choose your channels

“சதுரங்க வேட்டை 2” ரிலீஸ் குறித்த முக்கிய தகவல்: படக்குழுவினர் அறிவிப்பு

Wednesday, December 8, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அரவிந்த்சாமி, த்ரிஷா நடிப்பில் உருவான ’சதுரங்க வேட்டை 2’ என்ற திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி ஒரு சில ஆண்டுகள் ஆன போதிலும் இந்த படம் ஒரு சில பிரச்சனை காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க் கொண்டிருந்தது

இந்த நிலையில் தற்போது அனைத்துப் பிரச்சனைகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராகி உள்ளது என்பதும் வரும் ஜனவரி மாதம் இந்த திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

ONSKY Technology PVT. LTD என்ற நிறுவனம் ’சதுரங்க வேட்டை 2’ திரைப்படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்றுள்ள நிலையில் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தை ரிலீஸ் செய்யும் முத்து சம்பந்தம் அவர்கள் கூறியதாவது:

“அடிப்படையில், நான் ஒரு தீவிரமான சினிமா ரசிகன், கிட்டத்தட்ட எல்லா திரைப்படங்களையும் தவறவிடாமல் தீவிரமாகப் பார்க்கிறவன். சதுரங்க வேட்டை திரைப்படம் இந்திய திரைத்துறையில் வெளியான மிகச்சிறந்த திரைப்படங்களில் ஒன்று. இதன் இரண்டாம் பாகம் ’சதுரங்க வேட்டை 2’ வெளிவருவதைப் பற்றி கேள்விப்பட்டபோது, ​​மிகமிக மகிழ்ச்சியாக இருந்தது. குறிப்பாக, அரவிந்த் சாமி மற்றும் த்ரிஷா போன்ற முன்னணி நடிகர்கள் நடிப்பில் காட்சி துணுக்குகளை கண்டபிறகு, என்னுள் மிகப்பெரும் ஆர்வம் குடிகொண்டது.

இருப்பினும், எதிர்பாராத சூழ்நிலைகளால் படம் பல்வேறு சிக்கல்களில் சிக்கித் தவிப்பதைப் பார்த்து, நான் பெரிதும் ஏமாற்றமடைந்தேன். நான் திரைப்படத் தயாரிப்பில் இறங்கியபோது, ​​உள்ளடக்கத்தில் சிறந்த திரைப்படங்களைத் தயாரிப்பது மட்டும் அல்லாமல், மொழியியல் தடைகள் மற்றும் எல்லைகளை கடந்து வெற்றி பெறும் படங்களை உருவாக்க வேண்டும் என்று நான் பெரிதும் விரும்பினேன். அப்படியான ஒரு படைப்பு, ரிலீஸாகமல் இருப்பது கண்டு வேதனையுற்றேன்.

இறுதியில் சதுரங்க வேட்டை 2 படத்தை எங்கள் நிறுவனம் மூலம் வெளியிட முடிந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். மனோபாலா சார், சினிமா சிட்டி கங்காதரன் மற்றும் படம் வெளியாவதைப் பார்க்க ஆர்வமாக இருந்த பல உன்னத உள்ளங்களுக்கு நன்றி. திரு அரவிந்த் சாமி அவர்களுக்கு அவர் கொடுக்கும் ஒத்துழைப்புக்கு கோடானு கோடி நன்றி. இப்படத்தை வெளியிடும் வாய்ப்பை வழங்கியதற்காக இப்படம் சம்மந்தப்பட்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு பிரபலமான பழமொழி உள்ளது - சரியான நேரத்தில் மற்றும் சரியான இடத்தில், சரியான விஷயம் நிகழும். சதுரங்க வேட்டை 2 படத்தில் அது நடப்பதைக் கண்டு, நான் மனமார மகிழ்ச்சியடைகிறேன். இப்படத்தின் சில காட்சிகளைப் பார்த்தபோது, ​​பார்வையாளர்களை மகிழ்விக்கும் மற்றும் விமர்சனப் பாராட்டுகளையும் வெல்லும் அனைத்து கூறுகளும இப்படத்தில் இருப்பதை, என்னால் எளிதாக உணர முடிந்தது. இப்போது, ​​படத்தை வெளியிட முயற்சியில் இறுதி பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

மேலும் ஜனவரி 2022 இல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம். அரவிந்த் சாமி மற்றும் த்ரிஷா உடன், பிரகாஷ்ராஜ், , ராதாரவி, நாசர், சாந்தினி, ஸ்ரீமன், மனோபாலா, குமரவேல், இ.ராமதாஸ் மற்றும் பல தமிழ் சினிமா முன்னணி நட்சத்திர நடிகர்கள் சதுரங்க வேட்டை 2 படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.