close
Choose your channels

சத்யஜோதி-தனுஷ் இணையும் படத்தின் படப்பிடிப்பு எப்போது?

Friday, February 22, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' என்ற மிகப்பெரிய சூப்பர் ஹிட் படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தனுஷ் நடிக்கும் இரண்டு படங்களை தயாரிக்கவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்த செய்தியை சமீபத்தில் பார்த்தோம்

இந்த நிலையில் அவற்றில் முதல் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் தனுஷூக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை உள்பட மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் முதல் தொடங்கவுள்ளது. இந்த படத்தை இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே தனுஷ் நடித்த 'கொடி' மற்றும் தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த 'எதிர்நீச்சல், 'காக்கி சட்டை' ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.