தனுஷ் ரசிகர்களுக்கு டபுள் விருந்து கொடுத்த 'விஸ்வாசம்' தயாரிப்பாளர்

  • IndiaGlitz, [Wednesday,January 02 2019]

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தல அஜித் நடித்துள்ள 'விஸ்வாசம்' திரைப்படம் உலகம் முழுவதும் வரும் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படம் அஜித் ரசிகர்களை மட்டுமின்றி குடும்ப ஆடியன்ஸ்களையும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மிகப்பெரிய ஓப்பனிங் வசூல் மற்றும் சாதனை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் 'விஸ்வாசம்' படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் அடுத்ததாக தனுஷ் நடிக்கும் இரண்டு படங்களை தயாரிக்கவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

முதல் படத்தில் தனுஷ் நடிக்க இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே 'எதிர்நீச்சல்', 'காக்கி சட்டை மற்றும் 'கொடி 'படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு விவேக்-மெர்வின் இசையமைக்க உள்ளனர். அதேபோல் தனுஷ் நடிப்பில் சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவிருக்கும் அடுத்த படத்தை 'ராட்சசன்' பட இயக்குனர் ராம்குமார் இயக்கவுள்ளார்.

அஜித் நடித்த 'விவேகம்', 'விஸ்வாசம்' படங்களை தொடர்ந்து தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் அடுத்ததாக தனுஷ் நடிக்கும் இரண்டு படங்களை தயாரிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஜனவரியில் நயன்தாரா ரசிகர்களுக்கு முப்பெரும் விருந்து

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த ஆண்டு நடித்த 'கோலமாவு கோகிலா' மற்றும் இமைக்கா நொடிகள் ஆகிய திரைப்படங்கள் சூப்பர் ஹிட் ஆகிய நிலையில்

பிரபாஸ்-அனுஷ்கா கைகோர்த்து நடனம்: வைரலாகும் வீடியோ

இந்திய சினிமாவை உலக அளவுக்கு கொண்டு சென்ற இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் மகன் கார்த்திகேயாவின் திருமணம் நேற்று ஜெய்பூரில் பிரமாண்டமாக நடைபெற்றது

நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டி: பிரபல தமிழ் நடிகர் அறிவிப்பு

தமிழ் திரையுலகில் இருந்து ஏற்கனவே கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்பட பல பிரபலங்கள் அரசியலில் குதித்துள்ளனர்.

'அடங்கமறு' இயக்குனரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு

ஜெயம் ரவி நடிப்பில் இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கிய 'அடங்கமறு' திரைப்படம் கடந்த கிறிஸ்துமஸ் திருவிழா படங்களில் ஒன்றாக பெரும் போட்டிகளுக்கு இடையே வெளிவந்து வெற்றி பெற்றது.

'சூர்யா 37' டைட்டிலில் ஆச்சரியம்

சூர்யா நடித்து வரும் 'சூர்யாவின் 37வது படத்தின் டைட்டில் இன்று அதிகாலை புத்தாண்டு பிறந்த பத்து நிமிடத்தில் அதாவது 12.10 மணிக்கு வெளியாகும் என வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்