பாப்கார்ன் ரகசியத்தை வெளியிட்ட சத்யம் சினிமாஸ்

  • IndiaGlitz, [Wednesday,September 05 2018]

சென்னையின் அடையாளங்களில் ஒன்றாகிய சத்யம் சினிமாஸை பிவிஆர் நிறுவனம் வாங்கிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் சத்யம் சினிமாஸின் சமூக வலைத்தள பக்கத்தில் அங்கு விற்பனை செய்யப்படும் பாப்கார்ன் குறித்த தகவல் பகிரப்பட்டுள்ளது.

சத்யம் சினிமாஸ் திரையரங்கில் படம் பார்க்க செல்பவர்கள் அங்கு விற்கும் பாப்கார்னை சாப்பிட தவறுவதில்லை. இந்த திரையரங்கின் பாப்கார்ன் தனி ருசியாக இருப்பதை ரசிகர்கள் அனுபவித்துள்ள நிலையில் இந்த பாப்கார்ன் ருசியின் மர்மத்தை தற்போது அந்நிறுவனம் உடைத்துள்ளது.

இந்த திரையரங்கில் விற்பனையாகும் பாப்கார்ன் அமெரிக்காவில் உள்ள நெப்ராஸ்கா ஆற்றங்கரையில் விளைவதாகவும் அங்கிருந்து  நேரடியாகக் கொண்டு வரபடுவதாகவும், இந்த பாப்கார்னை சென்னை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும் சத்யம் சினிமாஸின் சமூக வலைத்தள பக்கத்தில் கூறப்பட்டுள்ளது

 

More News

'தளபதி' படத்துடன் மோதும் 'தல' ரசிகரின் படம்

தளபதி விஜய் நடித்து வரும் 'சர்கார்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியிட அனைத்து முயற்சிகளையும் படக்குழுவினர் எடுத்து வருகின்றனர்

தப்பியோடிய அதிமுக எம்.எல்.ஏவின் மணப்பெண் கூறிய காரணம்

பவானிசாகர் தொகுதியின் அதிமுக எம்.எல்.ஏ ஈஸ்வரன் என்பவருக்கு 23 வயது சந்தியா என்ற பெண்ணை நிச்சயம் செய்து வரும் 12ஆம் தேதி திருமணம் நடத்த இருவீட்டார் திட்டமிட்டிருந்தனர்.

ஒரே வார்த்தையில் விஜிக்கு பல்பு கொடுத்த மும்தாஜ்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ள போட்டியாளர்களின் உண்மையான சொரூபம் தற்போது வெளிவந்து கொண்டிருப்பதால் நிகழ்ச்சியும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது

ஆசிரியர் தினத்தில் அட்லி கொடுத்த குருதட்சணை

இன்று ஆசிரியர் தினம் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு கொண்டாடப்படும் இந்த ஆசிரியர் தினத்தில்

மும்தாஜூடன் விஜி மோதல்: உச்சக்கட்டத்தில் பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒரிரு வாரத்தில் முடிவடையவுள்ளதால் போட்டியாளர்கள் தங்களை காப்பாற்றி கொள்ளவும், சக போட்டியாளர்களை வெளியேற்றவும் எதையும் செய்ய தயாராக உள்ளனர்.