சிபிராஜின் 'ஜாக்சன் துரை' சென்சார் தகவல்கள்

  • IndiaGlitz, [Saturday,June 11 2016]

சிபிராஜ் நடித்த 'நாய்கள் ஜாக்கிரதை' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து கோலிவுட்டில் மீண்டும் வெற்றிகரமாக ரீ எண்ட்ரி ஆன அவர் தற்போது 'ஜாக்சன் துரை' என்ற திகில் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் நேற்று சென்சாருக்கு சென்றது.
இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் U/A அளித்துள்ளனர். திகில் காட்சிகள் அதிகம் இருப்பதால் U/A சர்டிபிகேட் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. U/A சர்டிபிகேட் பெற்றுள்ளதால் இந்த படம் தமிழக அரசின் வரிவிலக்கு சலுகையை பெறும் வாய்ப்பை இழக்கின்றது.
சிபிராஜ், பிந்துமாதவி, சத்யராஜ், மொட்டை ராஜேந்திரன், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை தரணிதரன் இயக்கியுள்ளார். சித்தார்த் விபின் இசையமைத்துள்ள இந்த படத்தை ஸ்ரீக்ரீன் புரடொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

More News

சீன மார்க்கெட்டை குறிவைக்கும் '2.0'

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் முதல்முறையாக 'மலாய்' மொழியில் டப்பிங் செய்யப்பட்டு மலேசியாவில் ரிலீஸ் ஆகவுள்ளது...

கபாலி'க்கு முன்பே 'மகிழ்ச்சி' ஃபேமஸ். ரகசியத்தை உடைத்த 'மெட்ராஸ்' நடிகை

சமீபத்தில் வெளிவந்து உலக சாதனை படைத்த சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி' படத்தின் டீசரின் இறுதியில் ரஜினிகாந்த் 'மகிழ்ச்சி'...

கட்டப்பா கேரக்டரை கையில் எடுத்த சிபிராஜ்

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய 'பாகுபலி' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்று ரூ.600 கோடிக்கும் மேல் சம்பாதித்தது...

'சபாஷ் நாயுடு' இயக்குனர் மாற்றமா?

உலக நாயகன் கமல்ஹாசன் தனது மகள் ஸ்ருதிஹாசனுடன் நடித்து வரும் 'சபாஷ் நாயுடு' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் தொடங்கியது...

ரஜினியுடன் இணைந்த பிரபல விமான நிறுவனம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படத்தின் பாடல்கள் வரும் 12ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் இந்த படம் ஜூலை 15ஆம் தேதிக்கு மேல் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது...