விரைவில் புதிய இயக்கம்: சத்யராஜ்‌ மகள் திவ்யா அதிரடி முடிவு

  • IndiaGlitz, [Friday,June 26 2020]

திவ்யா சத்யராஜ்‌ ஒரு நன்கு அறியப்பட்ட ஊட்டச்சத்து நிபுணர்‌. உலகின்‌ மிக பெரிய மதிய உணவுத்‌ திட்டமான அக்ஷய பாத்ராவின்‌ விளம்பரத்‌ தூதுவர்‌. சில வருடங்களுக்கு முன்பு மருத்துவ துறையில்‌ நடக்கும்‌ முறைக்கேடுகளை பற்றியும்‌ நீட் தேர்வை எதிர்த்தும்‌ திவ்யா பிரதமருக்கு எழுதிய கடிதம்‌ சமூக வலைத்தளங்களில்‌ வைரலானது. அரசு மருத்துவமனைக்கு வரும்‌ கர்பிணிப்‌ பெண்களுக்கு உள்ள இரும்புச்சத்து குறைபாட்டை போக்க வேண்டும்‌ என்று சுகாதார அமைச்சரிடம்‌ கோரிக்கை விடுத்திருந்தார்‌. தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக பெரும்‌ இழப்புகளை சந்தித்த விவசாயிகளுக்கு நேரடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும்‌ என்று திவ்யா சமீபத்தில்‌ விவசாய அமைச்சரிடம்‌ கேட்டுக்‌ கொண்டார்‌.

திவ்யா சத்யராஜ்‌ ஊட்டச்சத்து துறையில்‌ செய்த சேவைகளை அங்கீகரித்து அமெரிக்காவின்‌ சர்வதேச தமிழ்‌ பல்கலைக்கழகம்‌ அவருக்கு டாக்டா்‌ பட்டம்‌ வழங்கியுள்ளது. டாக்டா்‌ பட்டம்‌ பெற்றவர்களை கெளரவிக்க அமெரிக்காவில்‌ நடைபெறவிருந்த விழா கோவிட்‌ 19 காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க சர்வதேச தமிழ்‌ பல்கலைக்கழகத்தின்‌ டாக்டர்‌ பட்டம்‌ பெறுவது எனக்கு மிகவும்‌ மகிழ்ச்சியாக இருக்கிறது. அமெரிக்க சர்வதேச பல்கலைக்கழகத்தின்‌ நிறுவனர்‌ டாக்டர்‌ செல்வின்‌ குமார்‌ அவர்களுக்கு என்‌ நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்‌. நான்‌ புத்திசாலி மாணவி கிடையாது. ஆனால்‌ கடின உழைப்பாளி. அறிவாளியாக இருப்பதைவிட உழைப்பாளியாக இருப்பதுதான்‌ சிறந்தது என்று அப்பா சொல்லியிருக்கிறார்‌. ஆரோக்கியமான வாழ்க்கை வசதி உள்ளவர்களுக்கு தான்‌ என்பது நியாயம்‌ கிடையாது. தமிழ்‌ நாட்டில்‌ குறைந்த வருமானத்தில்‌ வாழ்பவர்களின்‌ ஆரோக்கியத்தை மேம்படுத்த விரைவில்‌ ஒரு இயக்கம்‌ ஆரம்பிக்க உள்ளேன்‌” என்று திவ்யா சொல்கிறார்‌.

More News

கொரோனா போன்று மற்றொரு தொற்று நோய்: சாத்தன்குளம் சம்பவம் குறித்து நீதிமன்றம் கருத்து

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் ஃபென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல்துறையினரால் டார்ச்சர் செய்யப்பட்டு கொலை

எட்டப்பன் பெயர் முளைத்தது எப்படி தெரியுமா??? சுவாரசியம் நிறைந்த வரலாற்றுத் தகவல்!!!

காட்டிக் கொடுக்கும் குணமுடையவர்களை நாம் எட்டப்பன் என்றே கிண்டல் செய்கிறோம்.

ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணத்திற்கு இணையானது: சாத்தான்குளம் சம்பவம் குறித்து பிரபல பாடகி

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் என்ற பகுதியில் தந்தை-மகனான ஜெயராஜ் மற்றும் ஃபென்னிக்ஸ் ஆகிய இருவரும் நடத்தி வந்த செல்போன் கடை அனுமதிக்கப்பட்ட நேரத்தைவிட அதிக நேரம் திறந்து வைத்ததாக

சென்னை ஜவுளிக்கடை அதிபர் குடும்பத்தில் 20 பேருக்கு கொரோனா: 2 பேர் பலி

சென்னையை சேர்ந்த ஜவுளிக்கடை ஒன்றின் உரிமையாளரின் குடும்பத்திலுள்ள 20 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பிரபல நடிகரின் மனைவிக்கு கொரோனா பாசிட்டிவ்? தொலைக்காட்சிகளில் வெளியான செய்தியால் பரபரப்பு

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் ஒரு சில திரையுலக பிரபலங்களும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்