close
Choose your channels

கம்யூனிஸ்ட் கட்சியில் இணைகிறாரா சத்யராஜ் மகள்?

Monday, October 15, 2018 • தமிழ் Comments

பிரபல நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா ஒரு ஊட்டச்சத்து நிபுணர் என்பது தெரிந்ததே. நியூட்ரிஷன் படிப்பில் பி.எச்.டி படித்து வரும் திவ்யா, கடந்த சில ஆண்டுகளாக 'அக்சய பாத்திரம்' என்ற உலகின் மிகப்பெரிய மதிய சத்துணவு திட்டத்தின் அம்பாசிடராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு அவர்களை திவ்யா சத்யராஜ் சமீபத்தில் சந்தித்ததாகவும், இதனையடுத்து அவர் அந்த கட்சியில் இணையவுள்ளதாகவும் வதந்திகள் பரவி வருகிறது. இதுகுறித்து திவ்யா சத்யாராஜ் விளக்கமளித்துள்ளார்.

நான் ஒரு கம்யூனிஸ்ட். கம்யூனிஸ்ட் கட்சியின் அனுதாபி என்பது உண்மைதான். நாட்டில் சமத்துவத்தை கட்டமைத்து, சுரண்டலை ஒழிக்கும் ஒரே கட்சி கம்யூனிஸ்ட் மட்டுமே. அதேபோல் நல்லக்கண்ணு அவர்களை நான் நன்கு அறிவேன். ஒரு அரசியல்வாதி எளிமையாகவும், சுயமரியாதையுடனும் இருக்க வேண்டும் என்பதற்கு அவர் ஓர் எடுத்துக்காட்டாய் வாழ்ந்து வருகிறார்..  

எனது ஒரே நோக்கம் தமிழகத்தில் ஏழ்மையில் வாடும் குழந்தைகளுக்கு போதுமான ஊட்டச்சத்துள்ள உணவை அக்ஷ்ய பாத்திரம் மதிய உணவு திட்டத்தின் மூலம் கிடைக்க செய்ய வேண்டும் என்பது மட்டுமே' என்று கூறியுள்ளார்.

இதன் மூலம் திவ்யா சத்யராஜ், கம்யூனிஸ்ட் கட்சியில் இணைவதாக கூறப்பட்ட வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டதாக கருதப்படுகிறது.

Get Breaking News Alerts From IndiaGlitz