'சூர்யா 40' படத்தில் இணைந்த பிரபல நடிகர்: மாஸ் அறிவிப்பு!

  • IndiaGlitz, [Friday,January 29 2021]

சூர்யா நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தில் சூர்யா முதலமைச்சராக நடிக்க இருப்பதாக ஒரு வதந்தி கிளம்பிய நிலையில் இந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்றும் இன்று பகல் 12 மணிக்கு இந்த படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்றும் பாண்டிராஜ் சற்று முன்னர் தனது டுவிட்டரில் தெரிவித்து இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் ஏற்கனவே இயக்குனர் பாண்டிராஜ் கூறியபடி தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி இந்த படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றில் சத்யராஜ் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யாவுடன் சத்யராஜ் இணைந்துள்ளதாக வெளிவந்திருக்கும் இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.