நடிகர் சத்யராஜ் வீட்டில் நிகழ்ந்த துயர நிகழ்வு: திரையுலகினர் இரங்கல்!

  • IndiaGlitz, [Sunday,December 05 2021]

சத்யராஜ் வீட்டில் நிகழ்ந்த துயர நிகழ்வு காரணமாக திரையுலகினர் சத்யராஜ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் சத்யராஜ் என்பதும் ஹீரோ, வில்லன், குணசித்திர கேரக்டர் என பல்வேறு வேடங்களில் அவர் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சத்யராஜின் சகோதரி கல்பனா மன்றாடியார் என்பவர் இன்று காலமானார். கடந்த சில நாட்களாக கல்பனா மன்றாடியார் அவர்கள் உடல்நலக் குறைவாக இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சத்யராஜின் சகோதரி கல்பனா மன்றாடியார் அவர்களுக்கு வயது 66 என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய இறுதிச்சடங்கு இன்று நடக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சத்யராஜ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு திரை உலக பிரமுகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

 

More News

செல்வராகவன் நடிக்கும் அடுத்த படம்: இயக்குனர் யார் தெரியுமா?

பிரபல இயக்குனர் செல்வராகவன் சமீபகாலமாக நடித்தும் வருகிறார் என்பதும் அவர் நடித்து முடித்துள்ள 'சாணிக்காகிதம்' என்ற திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது என்பதும் தெரிந்ததே.

பிரியங்கா கூடவே இருந்து குழி பறிச்சது அபிஷேக் தான் சார்: கமலிடம் இவ்வளவு தைரியமாக சொன்னது யார்?

பிரியங்கா கூடவே இருந்து குழி பறித்தது அபிஷேக் தான் சார் என கமல்ஹாசனிடம் தைரியமாக சொன்ன போட்டியாளரின் வீடியோ சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது. 

'கெடுத்திட்டியே என்னை கெடுத்திட்டியே': சிம்புவின் அடுத்த படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ்!

சிம்பு நடித்த 'மாநாடு' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தின் வெற்றி காரணமாக சிம்புவின் அடுத்தடுத்த படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது தெரிந்ததே.

தலைவியைத் தொடர்ந்து ஏ.எல்.விஜய் இயக்கத்தில் இணையும் முக்கிய பிரபலங்கள்!

நடிகர் விஜய்சேதுபதி – அனுஷ்கா ஷெட்டி இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கவுள்ளதாகத் தகவல்

காரை தள்ளுவதுபோல கையால் விமானத்தையே தள்ளிச்சென்ற சம்பவம்… வைரல் வீடியோ!

சாலையில் வாகனங்கள் பஞ்சராகி நின்றால் கையால் தள்ளுவதைப் பார்த்திருப்போம். ஆனால் ஓடுதளத்தில் டயர் பஞ்சராகி