close
Choose your channels

கமல் 'சத்யா' போன்றே சிபிராஜ் 'சத்யா'வும் வித்தியாசமாக இருக்கும். சத்யராஜ்

Saturday, June 17, 2017 • தமிழ் Comments

சிபிராஜ் நடிப்பில் உருவாகியுள்ள சத்யா' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் நடிகரும் சிபிராஜின் தந்தையுமான சத்யராஜ் இந்த படம் குறித்து ஒரு வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
'நாய்கள் ஜாக்கிரதை' படத்திற்கு பின்னர் தற்போது 'சத்யா' என்ற படத்தை தயாரித்துள்ளோம். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலர் வெற்றி பெற்றதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இந்த டிரைலரை வெளியிட்ட தம்பி சிவகார்த்திகேயனுக்கு எனது நன்றி
இந்த 'சத்யா' என்ற டைட்டிலை நாங்கள் கேட்டவுடன் கொடுத்த கமல் அவர்களுக்கு எனது பெரிய நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அன்றைய காலத்தில் கமலின் 'சத்யா' எவ்வாறு வித்தியாசமான படமாக அமைந்ததோ அதேபோல் இந்த 'சத்யா' படமும் வித்தியாசமாக இருக்கும். இந்த படத்தில் அடுத்து என்ன காட்சி வரும் என்பதை யூகிக்க முடியாத அளவுக்கு ஸ்கிர்ப்ட் அமைத்த இயக்குனர் பிரதீப்புக்கு எனது வாழ்த்துக்கள்
இந்த படத்தில் சிபிக்கு ரொம்ப வித்தியாசமான கேரக்டர். சிபியுடன் ரம்யா நம்பீசன், வரலட்சுமி சரத்குமார், ஆனந்தராஜ், சதீஷ், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். நல்ல ஒரு டீம் அமைந்த இந்த படம் 'நாய்கள் ஜாக்கிரதை' மாதிரி ஒரு பெரிய வெற்றி படமாக அமையும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர்பார்க்கின்றோம்
இவ்வாறு நடிகர் சத்யராஜ் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

Get Breaking News Alerts From IndiaGlitz