திரையுலகிற்கு சட்டப்பஞ்சாயத்து இயக்கம் கேட்டுள்ள 5 கேள்விகள்

  • IndiaGlitz, [Friday,July 07 2017]

ஜிஎஸ்டி வரி, கேளிக்கை வரி ஆகியவற்றை எதிர்த்து உண்மையில் மக்கள் தான் போராட வேண்டும். எந்த வரி போட்டாலும் அதை கட்டபோவது மக்கள் தான். ஆனால் மேற்கண்ட வரிகளால் எந்தவித பாதிப்பும் இல்லாத திரைத்துறையினர்களும், திரையரங்க உரிமையாளர்களும் போராட்டம் நடத்துவது எந்த விதத்தில் நியாயம் என்று சட்டப்பஞ்சாயத்து இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் திரைத்துறையினர்களுக்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் இந்த இயக்கம் 5 கேள்விகளை கேட்டுள்ளது. அந்த ஐந்து கேள்விகள் பின்வருமாறு:
1. வாகன பார்க்கிங்கிற்கு அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு மேல் வசூலிக்க மாட்டோம் என்று அறிவிக்க தயாரா?
2. தியேட்டருக்குள் விற்கப்படும் உணவுப்பொருட்களை எம்.ஆர்.பி விலையில் விற்க தயாரா?
3. வெளியில் இருந்து கொண்டு வரும் உணவுப்பொருட்களை தியேட்டருக்குள் கொண்டு செல்ல அனுமதியில்லை என்ற சட்டத்திற்கு புறம்பான போக்கை மாற்ற தயாரா?
4. தியேட்டர் கவுண்டரில் அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டும் வசூலிப்போம் என்று அறிவிக்க தயாரா?
5. சம்பாதிக்கும் கோடிக்கணக்கான பணத்திற்கு சட்டப்படி நாங்கள் வரி கட்டுவோம், கருப்பு பண பரிமாற்றம் செய்ய மாட்டோம் என்று திரை நட்சத்திரங்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் அறிவிக்க தயாரா?
என்று சட்டப்பஞ்சாயத்து இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த கேள்விகளுக்கு திரையுலகினர் பதில் அளிப்பார்களா? என்று பொறுத்திருத்து பார்ப்போம்

More News

வேலைக்கு சேர்ந்த மூன்றே மாதத்தில் தூக்கில் தொங்கிய பெண் ஐடி ஊழியர்

கடந்த சில மாதங்களாகவே ஐடி ஊழியர்களின் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் நேற்று மைசூரில் ஒரு பெண் ஊழியர் தான் தங்கியிருந்த அறையில் மின்விசிறியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மென்மொருள் மூலம் போலி ஏடிஎம் கார்டு. லட்சக்கணக்கில் கொள்ளையடித்த சென்னை வாலிபர் கைது

இன்றைய டெக்னாலஜி உலகில், எந்த பொருளை வாங்கினாலும் கிரெடிட் கார்ட் அல்லது டெபிட் கார்ட் ஸ்வைப் செய்வது சர்வசாதாரணமாகி வருகிறது.

வேலைநிறுத்தம் வாபஸ் எதிரொலி: தயாரிப்பாளர் சங்கத்தின் முக்கிய அறிக்கை

மத்திய அரசின் ஜிஎஸ்டி மற்றும் மாநில அரசின் கேளிக்கை வரி ஆகிய இரட்டை வரிமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த திங்கள் முதல் திரையரங்கு உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் செய்த நிலையில் நேற்று இதுகுறித்து தமிழக அரசுடன் திரையுலக பிரபலங்கள் பேச்சுவார்த்தை நடத்தியதையும், இதில் ஏற்பட்ட உடன்பாடு காரணமாக வேலைநிறுத்தம் தற்காலிகமாக வ

வேகத்தைடையை கவனிக்காக ஓட்டுனரின் அலட்சியத்தால் பெண் பயணி பலி

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே வேகத்தடையை கவனிக்காமல் மிக வேகமாக வேகத்தடை மீது பேருந்து ஏறி இறங்கியதால் பேருந்தில் இருந்த பயணிகள் தூக்கி அடிக்கப்பட்டனர்.

4 நாட்களுக்கு பின் இன்று திரையரங்குகள் திறப்பு! புதிய கட்டணம் எவ்வளவு?

மத்திய அரசின் ஜிஎஸ்டி மற்றும் மாநில அரசின் கேளிக்கை வரி ஆகிய இரட்டை வரிகளால் 58% வரை வரி கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டதால் இதனை எதிர்த்து கடந்த திங்கள் முதல் திரையரங்க உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்