ஜெனிபர் லோபஸ் பாடலுக்கு நடனம் ஆடிய தமிழ் நடிகை

ஊரடங்கு உத்தரவு காரணமாக படப்பிடிப்பு இல்லாமல் இருப்பதால் பிரபல நடிகர், நடிகைகள் முதல் திரைத்துறையினர் அனைவரும் தங்களது சமூக வளைதளத்தில் வித்தியாசமான வீடியோக்களை வெளியிட்டு தங்களது ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்

இந்தநிலையில் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சாயிஷா தற்போது தனது சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: பிரபல நடிகை, பாடகி, டான்சர் ஜெனிபர் லோபஸ் அவர்களின் இசை நிகழ்ச்சியை நேரில் ஒருமுறையாவது காண வேண்டும் என்பது எனது வாழ்நாள் ஆசை. இருப்பினும் இந்த நேரத்தில் அவருடைய பாடலுக்கு நடனம் ஆடியது பெரும் மகிழ்ச்சி’ என்று கூறியுள்ளார்

ஜெனிபர் லோபஸின் ஒரு பாடலுக்கு அவரை போலவே ஸ்டெப் வைத்து நடனமாடி அசத்தியுள்ள சாயிஷாவுக்கு நெட்டிசன்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோவுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது. ஏற்கனவே தமிழ் திரைப்படங்களில் சாயிஷா மிக அபாரமாக பல பாடல்களுக்கு நடனம் ஆடியுள்ளார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் கணவர் ஆர்யாவுடன் ‘டெடி’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ள சாயிஷா, தற்போது ஒரு கன்னட படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா பிரச்சனை முடிந்ததும் தொடங்கவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

இந்த 3 நோய் பாதிப்பு உள்ளவர்களை கொரோனா மேலும் பாடாய் படுத்துகிறது ஏன்??? மருத்துவக் காரணம்!!!

கொரோனா நோயாளிகளை வைரஸ் கிருமிகளிடம் இருந்து மீட்பதற்கு மருத்துவ உலகம் தொடர்ந்து பாடுபட்டு வருகிறது.

தளபதி விஜய் மகனின் நலம் குறித்து விசாரித்த தல அஜித்

தளபதி விஜய் மற்றும் தல அஜித் ஆகிய இருவரின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தினந்தோறும் மோதிக் கொண்டாலும், விஜய் மற்றும் அஜீத் ஆகிய இருவரும் இன்றுவரை நட்புடன் உள்ளனர்

கொரோனா அச்சம் எதிரொலி: சாலையில் இருந்த பணத்தை கண்டுகொள்ளாத பொதுமக்கள்

சாலையில் 10 ரூபாய் இருந்தாலே ஓடோடிச் சென்று எடுக்கும் பொதுமக்கள் தற்போது ஆயிரக்கணக்கில் சாலையில் பணம் இருந்தும் அதனை யாரும் கண்டுகொள்ளாமல் இருந்த அதிசய சம்பவம்

ரசிகரின் வேண்டுகோளை ஏற்று டாப்லெஸ் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை

கொரொனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

ஊரடங்கிற்கு பின் இதை முக்கியமாக கவனியுங்கள்: யோகிபாபு அறிவுரை

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைத்து அலுவலகங்கள், கடைகள், தொழிற்சாலைகள் ஆகியவை மூடப்பட்டுள்ள நிலையில் ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பின்னர்