தீபிகா படுகோனுக்கு இணையாக ஒரே ஷாட்டில் ஒரு நிமிட டான்ஸ்: அசத்திய தமிழ் நடிகை

  • IndiaGlitz, [Friday,May 15 2020]

கொரோனா வைரஸ் விடுமுறை நேரத்தில் தமிழ் திரைப்பட நடிகைகள் பலர் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் வித்தியாசமான வேடிக்கையான நகைச்சுவையான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர் என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் ஏற்கனவே நடிகை சாயிஷா ஒரு சில வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது மேலும் ஒரு நடன வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தீபிகா படுகோனே நடித்து உலகம் முழுவதும் சூப்பர் ஹிட்டான ’பாஜிராவ் மஸ்தானி’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு அவர் நடனம் ஆடியுள்ளார். ஒரு நிமிடத்திற்கு மேல் ஓடும் இந்த நடன வீடியோ வீட்டிலேயே படமாக்கப்பட்டதாக சாயிஷா குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த ஒரு நிமிட வீடியோ ஒரே ஷாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தீபிகா படுகோனேவின் மிக அருமையான டான்ஸ் மூவ்மெண்ட்டுக்களை அப்படியே இந்த நடனத்தில் பதிவு செய்துள்ள சாயிஷாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. உலகம் முழுவதும் இசை ரசிகர்களும், டான்ஸ் ரசிகர்களு, ரசித்த இந்த பாடலின் சாயிஷா வெர்ஷன் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

More News

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பது எப்போது? டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு

தமிழகத்தில் 40 நாட்களுக்கு பின் டாஸ்மாக் கடைகள் கடந்த 7ஆம் தேதி திறக்கப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு காரணமாக 9ஆம் தேதி மீண்டும் மூடப்பட்டது.

18ஆம் தேதி முதல் அரசு அலுவலகங்கள் செயல்படும், ஆனால்... தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு

வரும் 17ம் தேதியுடன் மூன்றாம் கட்ட ஊரடங்கு உத்தரவு முடிவடைவததை அடுத்து, அடுத்தகட்ட ஊரடங்கு அதற்கு பின்னரும் தொடரும் என்று செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில்

கொரோனா பரவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த முதல் ஐரோப்பிய நாடு!!! நிலவரம் என்ன???

அமெரிக்காவை அடுத்து ஐரோப்பியா நாடுகளில் கொரோனா அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஊழியர்கள் யாரும் பணிநீக்கம் செய்யப்பட மாட்டார்கள்: நெஞ்சில் பாலை வார்த்த நிறுவனம்!!!

உலகில் பெரும்பாலான நாடுகள் கடந்த 2 மாதமாக ஊரடங்கில் முடங்கி கிடந்தது.

இதுவரை வுஹான் மாகாணத்தில் நடத்தப்பட்ட கொரோனா மறு–பரிசோதனை எவ்வளவு தெரியுமா???

சீனாவில் கொரோனா நோய்த்தொற்று கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு பல மாகாணங்கள் இயல்பு நிலைமைக்கு திரும்பி இருக்கிறது.