ஆர்யாவை பார்த்தாலே எனக்கு வலிக்கின்றது: சாயிஷாவின் அதிர்ச்சி டுவீட்

  • IndiaGlitz, [Tuesday,March 03 2020]

நடிகர் ஆர்யா விரைவில் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கவுள்ள சல்பேட்டா என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் பாக்ஸிங் சம்பந்தப்பட்ட இந்த படத்தில் ஆர்யா குத்துச்சண்டை வீரராக நடிக்க உள்ளார் என்று செய்திகள் வெளிவந்தது தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படத்தின் குத்துசண்டை கேரக்டருக்காக ஆர்யா கடந்த சில மாதங்களாக கடுமையாக உடற்பயிற்சி செய்து, உண்மையான குத்துச்சண்டை வீரர் போலவே உடலை மாற்றியுள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் ஆர்யா வெளியிட்ட வீடியோ ஒன்றில் ஆர்யா உடற்பயிற்சி செய்யும்போது அவருடைய உதவியாளர் ஒருவர் கட்டையால் ஆர்யாவின் வயிற்றில் அடிக்கும் காட்சி அனைவரையும் திடுக்கிட வைத்துள்ளது. ஆனால் ஆர்யா சிரித்தபடியே அடிவாங்கி உடற்பயிற்சி செய்து வருவது அந்த வீடியோவில் உள்ளது.

இந்த நிலையில் ஆர்யாவின் இந்த வீடியோவை பார்த்த சாயிஷா தனது சமூக வலைத்தளத்தில், ‘உங்களைப் பார்க்கும்போது எனக்கு வலிக்கிறது. இவ்வளவு கடினமாக உழைக்கிறீர்கள்’ என்று நிகழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார். சாயிஷாவின் இந்த டுவீட் தற்போது வைரலாகி வருகிறது

More News

கள்ளக்காதலி கொடுமையால் குழந்தைகளுடன் தற்கொலை: 45 வயது நபரின் அதிர்ச்சி செயல்

மனைவி இறந்து ஆறு மாதமே ஆன ஒருவர் கள்ளக்காதல் வைத்திருந்த நிலையில் அந்த கள்ள காதலியால் தனது குழந்தைகளுக்கு கொடுமை நடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து

25 இளம்பெண்களை காதல் வலையில் வீழ்த்திய 9ஆம் வகுப்பு படித்த வாலிபர்!

ஒன்பதாம் வகுப்பு மட்டுமே படித்து அதன் பின்னர் படிப்பை தொடராத 19 வயது வாலிபர் ஒருவர் தன்னை கல்லூரி மாணவர் என அறிமுகம் செய்து கொண்டு கல்லூரி மாணவிகள் உள்பட 25 இளம் பெண்களை

காமெடி நடிகர் லோகேஷ் உடல் நிலை குறித்த தகவல் வதந்தியா? உண்மையா?

விக்னேஷ் சிவன் இயக்கிய 'நானும் ரவுடிதான்' என்ற படத்தில் காமெடி கேரக்டரில் நடித்திருந்த நடிகர் லோகேஷ் தொலைக்காட்சியிலும் புகழ் பெற்றவர் என்பது தெரிந்ததே.

ரஜினியின் அடுத்த படத்திலும் பாலிவுட்டில் வில்லனா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சமீபத்திய படங்கள் அனைத்திலுமே பாலிவுட் நடிகர்கள் தான் வில்லன்களாக நடித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அழைப்பை ஏற்று 'திரெளபதி' படத்தை பார்ப்பாரா பா ரஞ்சித்?

இயக்குனர் ஜி.மோகன் இயக்கிய 'திரெளபதி' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தை திரையுலக பிரமுகர்கள், அரசியல்வாதிகள் ஆகியோர் பார்த்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.