close
Choose your channels

சாயிஷா-யோகிபாபுவை இணைத்து வைத்த இயக்குனர் விஜய்!..

Tuesday, January 8, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகின் நம்பர் ஒன் காமெடி நடிகரான யோகிபாபு, தர்மபிரபு, ஜாம்பி, போன்ற ஒருசில படங்களில் முக்கிய வேடங்களிலும் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இவர் நடிக்கும் படங்களில் இவருடன் யாஷிகா உள்ளிட்ட பிரபல நடிகைகள் நடனம் ஆடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இயக்குனர் விஜய் இயக்கி வரும் 'வாட்ச்மேன்' படத்தில் ராப் பாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாகவும், இந்த பாடலில் சிறப்பு தோற்றத்தில் நடிகை சாயிஷாவும், யோகிபாபுவும் நடனம் ஆட இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த பாடல் இந்த படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்று கூறப்படுகிறாது

ஜிவி பிரகாஷ் நாயகனாக நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜிவி பிரகாஷூடன் ராஜ் அர்ஜூன், சம்யுக்தா ஹெக்டே உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.