துப்பாக்கி லைசன்ஸ் கேட்டு பள்ளி, கல்லூரி மாணவிகள் மனு 

  • IndiaGlitz, [Saturday,March 16 2019]

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்திற்கு பின்னர் பாலியல் கொடூரர்களிடம் இளம்பெண்கள் சிக்காமல் இருக்க கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் தேவைப்பட்டால் பெண்கள் துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்து கொள்ள வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள், மகளிர் அமைப்புகள் கேட்டுக்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் துப்பாக்கி வைத்திருக்க அனுமதி கேட்டு கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் 2 மாணவிகள் விண்ணப்பம் செய்துள்ளனர். இவர்களில் ஒருவர் பள்ளி மாணவி என்பதும் இன்னொருவர் கல்லூரி மாணவி என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்திய தண்டனை சட்டம் 100ன் படி நம்மை தாக்கவோ அல்லது பாலியல் அச்சுறுத்தலில் ஈடுபடுத்தவோ எவரேனும் முயலும்போது அவர்களுக்கு தாக்குதலின் மூலம் மரண பயத்தை ஏற்படுத்தி அச்சுறுத்த பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிமை உண்டு. இந்த உரிமை மரணம் விளைவிக்கும் அளவுக்கு நீடிப்பதாக சென்சன் 100 கூறுகின்றது. எனவே அதன் அடிப்படையில் இந்த இரு மாணவிகளும் தங்களை பாதுகாத்து கொள்ள முன்னெச்சரிக்கையாக துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு மனு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது